Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Tuesday, November 9, 2010

கூகுளிடமிருந்து பிறந்த நாள் பரிசு வேண்டுமா?

[அப்படியே கூகிள் கொடுத்தாலும் அதை எடுக்க முடியாதபடி நீங்கள் கணினிக்கு வெளியே இருப்பதால்] உங்கள் பிறந்த நாளன்று உங்களுக்கென தனியான வாழ்த்து doodle காட்டும். ஆனால் இதற்கு நீங்கள் கூகுளிடம் உங்கள் பிறந்த நாளை சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதவர்கள் http://www.google.com/profiles/me சென்று Edit profile சென்று contact info டாப்பில் கொடுக்கலாம். உங்கள் பிறந்த நாள் அன்று அந்த doodle காட்டும்.

இன்றே அதை சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டால் இன்றைய தேதியை கொடுத்து கூகிளை ஏமாற்றலாம்.


இணையத்தில் செலவிடும் நேரத்தை வருங்கால மக்களுக்கும் பயன்படும்படி செய்யவேண்டுமானால் அதில் குறிப்பிடத் தக்க ஒன்று விக்கிப்பீடியா பங்களிப்பு. விக்கிப்பீடிய என்பது மக்களால் உருவாக்கப் படுவது யார்வேண்டும் என்றாலும் அதில் தகவலை ஏற்றலாம். ஆனால் நாம் கொடுக்கும் அத்தனை முக்கிய தகவலுக்கு ஆதாரச் சுட்டியைக் கொடுத்தாக வேண்டும். இதனால் புதிய புதியப் பக்கங்கள் உருவாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டாலும் அதன் நம்பத் தன்மை அதிகரிக்கிறது. விக்கிப்பீடியவில் தமிழ் வடிவம் வந்து பல தகவல்களை ஏந்திக் கொண்டிருக்கிறது. இவை எல்லாம் பலரால் தன்னலமின்றி எழுதப்பட்டதால் நாம் பயனடைகிறோ உங்களால் நல்ல தமிழில் எழுதமுடிந்தால் உங்கள் பங்களுப்பு நாளைய மக்களுக்கு உதவும். புதியப் பக்கங்கள் உருவாக்கலாம், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து புதிய பக்கம் உருவாக்கலாம், ஏற்கனவே உள்ள பக்கத்திற்கு வகைப் பட்டியல் இடலாம் என பல பிரிவுகளில் பங்களிக்கலாம். வருகிற நவம்பர் 14 விக்கி மாரத்தான் நடக்கவுள்ளது எல்லாரும் சேர்ந்து தேர் இழுக்கலாம்.
http://ta.wikipedia.org/wiki/WP:TamilWikiMarathon


உங்கள் விருப்ப தளங்களை ஒரே கூடையில் போட்டுவைக்கலாம் வேண்டிய பொது எளிதில் எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தமிழ் செய்தித்தாள்கள் அல்லது பிடித்த வலைப்பூக்கள் அல்லது திரட்டிகள் என்று அடிக்கடி பார்க்கப்படும் தளங்கள் அனைத்தையும் ஒரேப் பெயரில் பூட்டி, வேண்டிய பொது ஒரே கிளிக்கில் எல்லா தளத்தையும் பயன் படுத்தலாம்.
http://bridgeurl.com
இங்கு சென்று ஒரு தலைப்பைக் கொடுத்து அடுத்தப் பெட்டியில் வேண்டிய வலைமுகவரிகளைப் போட்டு create link செய்யவும். அந்த தளங்கள் எல்லாம் ஒரு ஸ்லைட் ஷோ போல வரிசையாகக் காட்டும்.
இனி தமிழ்ப்புள்ளி திரட்டிப் பக்கத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை குறையலாம்.:(


இணையத்தில் நீங்கள் யார் என்று காட்ட உங்கள் எல்லா சமூகதள முகவரிகளையும் ஓரேயிடத்தில் சேர்க்க விரும்பினால்
http://about.me/
உதாரண பக்கங்களை அங்கே பார்க்கலாம். தற்போதைக்கு இந்த தளம் உங்கள் பெயருக்கு ஒதிக்கீடு மட்டும் தருகிறது. வருங்காலத்தில் அந்தப் பக்கம் அமையும்.


அழகிய அண்டார்ட்டிகாவை ரசிக்கலாம். கூகிள் மேப் மூலமாக பயணிக்கலாம். அதன் வலது பக்ககீழ் முனையில் உள்ள பென்குயினை நகர்த்துவதன்முலம் பல்வேறு இடங்களுக்கு போகலாம். இணைப்பில்லாத இடங்களுக்கு பல புகைப்படங்கள் மட்டும் உள்ளன.
http://goo.gl/44Guo


சிலருக்கு டிவிட்டரில் பாலோயர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் என்று ஒருவித ஆசையிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தங்களைப் போன்ற பாலோயர்கள் ஆசையுள்ளவர்களை இணைக்கும் பாலமாக பல தளங்கள் உள்ளன. இதில் சேர்வதால் பாலோயர்கள் அதிகரிப்பது உறுதி.[ஆனால் உங்கள் டிவிட்டை படிப்பாங்க என்று நான் கேரண்டியெல்லாம் தரமாட்டேன். ]
http://www.boosttwitterfollowers.com/
http://www.twittershuffle.com/index.php
http://www.nowfollowers.com/
http://twootwoo.com/
http://tweeterswarm.com/
http://www.freetwitterfollowers.net/
http://www.tweeterfollower.com/
http://fastfollowertrain.com/


சென்றப் பதிவில் அறிமுகமான ப்ளாக்கர் மறுமொழிகளுக்கான nccode பற்றி உங்கள் மறுமொழியாளர்களுக்கு தெளிவாகத் தெரிய புதிய ஆவணப்பக்கம் இங்குள்ளது. இனி மறுமொழிகளின் குறிப்பில் "இந்த தளத்தில் nccode பயன்படுத்தலாம்" என்ற செய்தியுடன் இந்த ஆவணப்பக்கத்தின் இணைப்பைக் கொடுத்தால்கூட போதும்.
மேலும் சில கோடுகள்
[ce]...[/ce] கருத்தை மைத்தில் கொண்டுவர
[ma+]...[/ma+] வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட
[box]...[/box] கருத்தை ஒரு பெட்டிக்குள் போட
[mark]...[/mark] ரிப்ளை செய்ய
[card="blue"]...[/card] ஒரு அட்டையில் எழுதும் எபக்ட்
இந்த கோடில் சித்துவேலை செய்து என் இன்டர்நெட் எஸ்புலோரரில் படங்கள் தெரியவைத்துயிருக்கிறேன். உங்களுக்கு எப்படி?
எல்லாம் நல்லபடியாகத் தெரிந்தால், பழைய கோடுடன் இணைக்கப்படும்.

5 comments:

நீச்சல்காரன் said...

[ce]கருத்தை மைத்தில் கொண்டுவர[/ce]
[ma+] வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட[/ma+]
[box] கருத்தை ஒரு பெட்டிக்குள் போட[/box]
[mark]என் இன்டர்நெட் எஸ்புலோரரில் படங்கள் தெரியவைத்துயிருக்கிறேன். உங்களுக்கு எப்படி?
எல்லாம் நல்லபடியாகத் தெரிந்தால், பழைய கோடுடன் இணைக்கப்படும்.[/mark]

நீச்சல்காரன் said...

[card="MediumAquaMarine"][im]http://1.bp.blogspot.com/_e_TNZOEzeAo/TNn-HdF0uII/AAAAAAAAAaM/s6IYjECcSLI/s320/speaker.JPG[/im][/card]

ஆர்வா said...

வாவ்.. எவ்வளவு பயனுள்ள விஷயங்கள்.. அருமை நண்பா

செல்வா said...

[si='4'][co='green'][ma]உண்மைலேயே ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சுங்க ., நேத்து நீங்க சொன்னத என் ப்ளாக் ல சேர்த்துட்டேன் .. அதனால என் ப்ளாக்லயும் எழுதுக்கள ஓட விட முடியுது . அதே மாதிரி கூகுளேல என்னோட பிறந்தநாளையும் சேர்த்துட்டேன் .. நன்றி..! [/si][/co][/ma]

Anonymous said...

very good!