ஒரே மூச்சில் பத்து திரட்டியில் பதிவை இணைக்கலாம்.
பிரபல பதிவர்கள் நீங்கலாக மற்றவர்கள் தங்கள் பதிவுகளை எழுதியப் பின் வெவ்வேறு திரட்டிகளுக்கு தனித் தனியாக போய் தமது பதிவை இணைத்து அதற்கு வேண்டிய குறிப்புகள் கொடுத்து சமர்பிப்பது என்பது அதிக நேரம் எடுக்கும் காரியம் இதனால் நேரம் கிடைக்கையில் தான் இணைக்கமுடிகிறது. அதற்கு மாற்றாக எளிதில் ஒரே இடத்திலிருந்து வெவ்வேறு திரட்டிகளில் பதிவை இணைக்கமுடியுமா? என்கிற சதீஸ் அவர்களின் ஆவலுக்கு தீனி போட ஒரு முயற்சி நடந்தது. இறுதியில் தமிழில் உள்ள பாதித் திரட்டிகளை அப்படி இணைக்கமுடியவில்லை. ஆனால் மீதி திரட்டிகள் இணக்கமாக[தொழிற்நுட்ப ரீதியாக] இருக்கிறது. இதன் விளைவாக ஒரே பக்கத்திலிருந்து பத்து திரட்டிகளுக்கு உங்கள் பதிவையோ அல்லது எந்தவொரு வலைப் பக்கத்தையோ இணைக்கும் வசதியை அறிமுகம் செய்கிறேன்.
http://tamilpoint.blogspot.com/p/submit.html
வேண்டிய குறிப்புகளை மேலே உள்ள தமிழ் தட்டச்சு பெட்டியில் அடித்து வைத்துக் கொள்ளலாம். வட்டமிட்டுள்ள இடத்தில் பக்கத்தின் முகவரியைக் கொடுத்து வேண்டிய திரட்டியை சொடிக்கினால் போதும். முதல் சொடுக்கில் அந்தந்த திரட்டிகளில் உங்கள் பயனர் கணக்கை கேட்டு வாங்கிக் கொள்ளும் அடுத்த சொடுக்கில் பக்கத்தையும் சேர்த்துக் கொள்ளும். உங்கள் குறிப்பை காப்பி பேஸ்ட் செய்து கொண்டு எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.
பி.கு.தற்போதைக்கு இங்கு பத்து திரட்டிகள் இந்த வசதியை அனுமதிக்கிறது. அனுமதிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அதிகமான திரட்டிகள் சேரலாம்.
பிளாக் சேர்ச் பெட்டியில் தமிழ் வராதா?
7000த்திற்கும் அதிகமான தமிழ் வலைப்பூக்கள் இருந்தும் அதிகமான தளங்களில் தமிழில் தேடும் வழி முறையை எளிய பயனர்களுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அதாவது தமிழ் பதிவுகள் மட்டும் கொண்டுள்ள ஒரு தளத்தில் தேட நினைக்கும் வாசகனுக்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என அறியாமல் ஆங்கிலத்திலேயே தேடி ஏமாற்றம் தான் பெறுகிறான்.
உதாரணம்:
ஒரு வாசகருக்கு கவிதைகள் பிடிக்கும் என்பதால் தமிழ்க்கவிதைகள் கொண்ட ஒரு தளத்து தேடும் பெட்டியில் kavithai என்று அடித்துப்பார்ப்பார் அல்லது tamil poems என்பார் ஆனால் அதில் எதுவும் 'கவிதை' வராது. இதுவே அந்தப் பெட்டியில் நேரடியாக தமிழாக்க கருவி இருந்தால் அவர் அடிக்கும் சொல் 'கவிதை' என்று மொழிமாறி அவருக்கு தேவையான கவிதைகளையை எல்லாம் பட்டியலிடும்.
எப்படி ஒரு பிளாக்கர் பதிவு ஏற்றும் இடத்தில் தமிழாக்க கருவியுள்ளதோ அதுபோல இங்கும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்[இத்தளத்தின் வலது மூலையில் உள்ளது]. ஆனால் அதை பிளாக்கில் இணைப்பதற்கான வழிகள் கொஞ்சம் கஷ்டமானதுதான் ஆனால் இந்த தமிழாக்க கருவியை இணைத்துக் கொண்டால் நீங்களோ அல்லது வாசகரோ எளிதில் தமிழில் தேடமுடியும். அதை இணைக்க விரும்பினால் கீழுள்ள வழிகளை தொடரவும்.
உங்கள் பிளாக்கில் தேடும் பெட்டி முதலியேயே இருந்தால் அந்தப் பெட்டியின் <input id='________' என்ன என்று குறிக்கவேண்டும் அதற்கு "/search/" என்கிற வார்த்தையைப் போட்டு உங்கள் templateல் தேடினால் அதற்கு கீழோ மேலோ தான் இந்த id இருக்கும். உதாரணத்திற்கு id='search-form' என்று இருந்தால் அடைப்புக்குறிக்குள் உள்ள search-form வார்த்தையை குறித்துக் கொள்ளவும்.
அடுத்து இந்த கோடுகளை </body>க்கு மேலேப் போட்டு சிவப்பு வார்த்தைக்குப் பதில் குறித்துவைத்த வார்த்தையைப் போடவும் அவ்வளவே
<script type="text/javascript" src="http://www.google.com/jsapi"></script>
<script type="text/javascript">
google.load("elements", "1", {
packages: "transliteration" });
function onLoad() {
var options = {
sourceLanguage: 'en',
destinationLanguage: ['ta'],
shortcutKey: 'ctrl+g',
transliterationEnabled: true };
var control =
new google.elements.transliteration.TransliterationControl(options);
var petti = [ "search-form" ];
control.makeTransliteratable(petti);
control.showControl('translControl'); }
google.setOnLoadCallback(onLoad);
</script>
சில ப்ளாக்குகளில் இந்த வகையான தேடல் பெட்டி இல்லாமல் கூகுளின் நேரடிப் பெட்டி இருக்கலாம். powered by
என்று இருக்கும் வகைகளில் இந்த முறை பயன்படாது. வேண்டும் என்றால் புதிய கட்ஜெட் ஆக இந்த கோடுகளை இணைத்துக் கொள்ளுங்கள்
design-> page elements-> add gadget சென்று புதிய HTML/javascript என்கிற கட்ஜெட்டை உருவாக்கி அதற்குள் கீழுள்ள கோடுகளை மட்டும் போடவும்.
<div width='350'>
<font color="red">தமிழில் தேடுங்கள்.[space key அடித்து] </font>
<form action='/search/' id='cs-form' method='get'>
<p class='box'>
<input id='search-ethir' name='q' onblur='if (this.value == "") {this.value = "search in tamil";}' onfocus='if (this.value == "search in tamil") {this.value = "";}' size='20' tabindex='1' type='text' value='search in tamil'/>
</p></form>
</div>
<script type="text/javascript" src="http://www.google.com/jsapi" ></script>
<script type="text/javascript">
google.load("elements", "1", {
packages: "transliteration" });
function onLoad() {
var options = {
sourceLanguage: 'en',
destinationLanguage: ['ta'],
shortcutKey: 'ctrl+g',
transliterationEnabled: true };
var control =
new google.elements.transliteration.TransliterationControl(options);
var petti = [ "search-ethir" ];
control.makeTransliteratable(petti);
control.showControl('translControl'); }
google.setOnLoadCallback(onLoad);
</script>
வலைப்பூக்களில் தமிழ் அகராதியை இணைக்க வேண்டுமா?
வலைப்பூக்களில் தமிழ் அகராதி வசதியை கொடுக்கும் முகமாக அகராதி கட்ஜெட்டை கூகிள் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
தமிழ் அகராதி
முதல் பதிப்பு
இரண்டாம் பதிப்பு
முன்றாம் பதிப்பு
ஒவ்வொரு கட்ஜெட்டையும் பயன்படுத்திப் பார்த்து, விரும்பினால் வலைப்பூக்களில் இணைத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு கட்ஜெட்டை இங்கு பயன்படுத்திருப்பீர்கள் அதனால் புதிய கட்ஜெட் உங்கள் பார்வைக்கு.
23 comments:
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள் நண்பரே ..
பயனுள்ள தகவல்களை அடிக்கடி தரும் உங்கள் சேவைக்கு நன்றி
@வெறும்பய, விரைவான கருத்துக்கு நன்றிகள்
@ரஹீம் கஸாலி,வாங்க ரஹீம் உங்கள் ஊக்கத்திற்கு தான் முதல் நன்றி
[ma]super thanks[/ma]
நல்ல தகவல்கள்!
வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் அருமை...
தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப தகவல்....
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே
[ma]நன்றி..[/ma]
நல்ல தகவல், ஆனால் சில குறைப்பாடு இருக்கு, நிவர்த்தி செய்தல் அவசியம்
@ANKITHA VARMA
ஆஹா, எதில் குறைபாடு என்றால் முயற்சி செய்ய உதவியாக இருக்குமே!
@ரிஸால் அஹமது,
@தேவன் மாயம்,
@மாணவன்,
@அமைதிச்சாரல்
[im]https://sites.google.com/site/neechalkaran/pictures/thank_you.JPG[/im]
மிகவும் பயனுள்ள பதிவு. பதிவர்களின் நேரத்தினை மிச்சப்படுத்தும். நன்றிகள்.
போட்டோ ஷாப்பில் யுனிகோட் தமிழ் டைப் செய்தால் வருவதில்லையே. அதை சரி செய்வது எப்படி ?
மூன்று முத்தான பதிய குறிப்புக்கள்.
நன்றி, நன்றி, நன்றி!
@ரிஷபன்Meena,
உங்கள் கணினியின் கண்ட்ரோல் பேனலில் உள்ள font என்கிற folderல் தமிழ் எழுத்துருக்களைப் போடவும். அங்குப் போட்டால் போட்டோ ஷாப்பில் உள்ள font ஆப்ஷனில் அந்த எழுத்துருக்கள் கட்டப்படும். அப்படியே செலக்ட் செய்யவும். எழுத்துருக்கள் வேண்டும் என்றால் http://kandupidi.com/font_help.php செல்லவும். {யுனிகோட் எழுத்துருக்களை எடுத்துக் கொள்ளவும்.}
இதைப் பார்த்து விட்ட ஒட்டுப் போடாமல் பொனால் அவன் ஒரு பதிவனே அல்ல...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
எனைக் கவர்ந்த கமல் படம் 10
நல்ல பதிவு
[si="20"][co="red"][ma]இப்பவும் புதிய விசயங்கள் தான் ..
நானும் என்னோட ப்ளாக் ல தமிழ் அகராதிய இணைக்கிறேன் ..!![/ma][/co][/si]
தமிழில் டைப் செய்து அங்கேயே பின்னூட்டம் இடும் முறையை சொல்லுங்கள். நிறைய ப்ளாகர்கள் இப்படி வைத்துள்ளனர்.அதாவது தமிழ் transliteration gadget அதே பக்கத்திலேயே இருக்கும். நன்றி.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...........
நன்றி தலைவரே என் ஆர்வத்திற்கு விளக்கம் தந்தமைக்கு
Nice...but i think there's something wrong with my PC... I can`t understand a word
:P
அத்தனையும் அருமையான பதிவுகள் பயன் பெற்றேன் ~நன்றி
Post a Comment