பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக இந்த சலுகை. இந்த சலுகை குறிப்பிட நாட்களுக்கு மட்டும்தான். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உங்களை மகிழ்விப்பதில் மிகவும் பேறு அடைகிறோம் தாமதிக்காமல் சீக்கிரம் முந்துங்கள். உடனே இந்த கேள்விகளுக்கு பதிலைச் சொல்லிவிட்டு பரிசை அள்ளிக்கொண்டு போங்கள் |
ஃபோன் என்றாலே தெரியாதவுனக்கு ஐ-ஃபோன் வேண்டுமா? அதுவும் இலவசமாக? என முகத்தில் அறையாதகுறையாக அந்த ஈ சொல்லிவிட்டு சொல்லும்
சரி எங்கே இப்படி நடக்கும்? உலாவியின் முகவரிபட்டையில் தவறாக ஒரு தளத்தின் பெயரைப் போட்டுவிட்டால் அல்லது, மின்னஞ்சல் வழியாக இந்த களவாணி தளமுகவரி வந்தால் அல்லது சுருக்க முகவரியாக ஒளிந்து கொண்டு வந்தால் அதை சொடிக்கிச் சென்றால் நடப்பவைதான் இது. இன்னும் எப்படியெல்லாம் வரலாம் என யோசித்துக் கொண்டுயிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு டிவிட்டருக்கு செல்ல twiiter.com என தவறாக அடித்தால் டிவிட்டர் போன்ற தள அமைப்புடைய வேறு தளம் திறந்து மேற்கூறிய கவர்ச்சி வாக்கியங்களை காட்டி உங்களை இழுக்கும். இதற்கு பெயர்தான் URL spoofing[அப்படித்தான் நினைக்கிறேன்]. பயனரின் மனநிலைப்படி இது டிவிட்டர் தளம் என்று நினைக்கக் கூடும் அதனால் நம்பி கேட்கும் தகவலைக் கொடுப்பார். மேலும் உலவிய ரீதியாக கேள்விகளும் இலவசங்களும் உங்களை வெளியே வரவிடாதபடி இருக்கும். உதாரனத்திற்கு, twiiter.com என்ற முகவரி www.twitter.com-prizesurvey.com/ அல்லது www.twitter.com-freeprizes.com போன்ற தளத்திற்கு இட்டுச் செல்லும். கவனித்தால் டிவிட்டர் தளமுகவரி போல மூளைக்குப்படும்; ஒவ்வொரு நாட்டு பயனருக்கும் அந்நாட்டுக்கேற்றார்போல பக்கங்கள் அமையும். இன்றே கடைசி நாள் போலவும் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி போலவும் காட்டும். இன்னும் பல கண்கட்டி வித்தைகள் எல்லாம் காட்டும்.
நேற்று சோதிக்கையில் கிடைத்த சில பிழைச் சொற்கள் blooger, twiiter, twiteer, facebokk, facebbok, faceook, twtter,goggle, yootube, Yuutube,... என பல பரிமாணங்களில் பல சமூக தளங்களில் பயனரை ஆட்டைய போடும் படியுள்ளது. இந்த பெயர்களை டாட் காமுடன் போட்டு தேடினால் எப்படில்லாம் ஏமாற்றுகிறார்கள் என அறிந்து கொள்ளலாம். இந்த முகவரிகளில் எல்லாம் பதிவு செய்துக் கொண்டு வேறு தளத்திற்கு திசைதிருப்பி தெரியாமல் நுழைந்தவர்களிடம் கைவரிசையைக் காட்டுகிறார்கள்.
கிளைமேக்ஸ்:
- எந்த ஒரு முகவரியிலும் டாட் காம் முன்புவருபவைதான் உண்மையான டொமைன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலே குறிப்பிடுள்ள தளத்தில் twitter சப்-டொமைன், com-prizesurvey தான் உண்மையான டொமைன்
- முக்கிய தளங்களை புக்மார்க்/favorites செய்வது இங்கு உதவும்.
- குழப்பமாக இருந்தால் கூகிள் போன்ற தேடுதளத்தில் வேண்டிய தளமுகவரியை இட்டு அதன்வழியாகப் போகவும்{goggle[.]com ஜாக்கிரதை!}
- முக்கியமாக, இலவசம் என்று எங்கே இருந்தாலும் ஒன்றிற்கு மூன்று முறை சரிபார்த்துக் கொண்டு பயன்படுத்தவும். காரணம் இலவசமாக கொடுக்கபோவது அல்வாவாக இருக்கலாம்.
- எந்தவொரு தெரியாத மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கர்சர் வைத்து சோதித்துப்பின் பயணிக்கவும்.
- ஏற்கனவே குறிப்பிட்டது போல சுருக்க முகவரிகளை எடுத்தவுடன் கிளிக் செய்வதை தவிர்க்கவும், சோதித்தப்பின் பயன்படுத்தவும்.
- இணையவெளியில் தெரியாத தளத்திற்கு தேவையில்லாமல் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற தனிநபர் தகவல்கள் தருவதை தவிர்க்கலாம்.
4 comments:
விழிப்புணர்வு தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே :)
பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி
நான் இந்த மாதிரி வந்த உடனே ஓடிருவேன்..
என் டீடைல்ஸ் தர மாட்டேன் .. நன்றிங்க ..
ennavellam நடக்குது பாத்தீங்களா சார்
Post a Comment