Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, November 24, 2011

வலைப்பூக்களின் வாசனையின் ஒருபகுதி பதிவாலும் மற்றபகுதி பின்னூட்டத்தாலும் உருவாக்கப்படுகிறது. அத்தகைய பதிவுகள் பதியப்படும் வரிசையில் புதியவை முன்னே வந்துவிடும் இது எல்லா நிறுவன வலைப்பூக்களில் பார்க்கலாம். ஆனால் மறுமொழிகள் அப்படி அமைவதில்லை, புதிய மறுமொழிகள் ஒன்றன் கீழாக ஒன்றாகத் தான் வரிசைப்படுத்தப்படுகிறது. சில பேஸ்புக் போன்ற மறுமொழி இடைச்சொருகளைப் பயன்படுத்தினால் புதிய மறுமொழிகளை முன்னுக்கு கொண்டுவரலாம். ஆனால் அப்படியில்லாமல் பிளாக்கர், வேர்ட்பிரஸ் போன்றவை தேதிவாரியாக மறுமொழி வரிசைப்படுத்தும் வசதியை இதுவரை தரவில்லை.

இந்த நிலையில் புதிய பிளாக்கர் மறுமொழிகளை முன்னே காட்டவிரும்புகிறவர்கள்; பழைய மறுமொழிகளை பின்னே காட்டவிரும்புகிறவர்கள்; இடைக்கால மறுமொழிகளை இடையில் காட்ட விரும்புகிறவர்கள் என கமெண்ட்டில் வித்தியாசம் காட்ட விரும்புகிறவர்களுக்கு ஒரு நிரல் துண்டு அறிமுகம். இதை இணைப்பதன் மூலம் தேதிவாரியாக புதியப் பின்னூட்டம் மேலே வந்து நிற்கும்.

இதை பிளாக்கர் தளத்தில் மட்டும் பயன்படுத்தலாம். இதை இணைக்க Design ->Edit HTML ->Template சென்று </body> என்ற வரிகளுக்கு மேலே கீழுள்ள நிரல்களை[code] எடுத்துப் போட்டு சேமிக்கவும்.
<script src='http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/ncsort.js' type='text/javascript'/>


ஏதாவது ஒரு பதிவிற்கு மட்டும் மறுமொழியை வரிசைப் படுத்த வேண்டுமென்றால்
<div id="backlinks-container"> அல்லது <div class="comment-footer">
வரிகளுக்கு மேலே கீழுள்ள வரிகளைப் போட்டு வண்ணமிட்ட இடத்தில் பதிவின் முகவரியைக் கொடுக்கவும். இதன் மூலம் அந்தப்பதிவில் மட்டும் இந்த நிரலி வேலை செய்யும்

<b:if cond='data:post.url == "http://yourblogaddress.blogspot.com/2011/11/sample.html"'>
<script src='http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/ncsort.js' type='text/javascript'/>
</b:if>

ஏறக்குறைய முக்கிய ப்ளாக் டேம்ளைட்டில் எல்லாம் இந்த நிரல வேலை செய்கிறது. க்ரோம், ஃபயர் பாக்ஸ், எக்ஸ்ஃப்லோரர் என முக்கிய உலவிகளில் சோதிக்கப்பட்டது. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டவும் சீர் செய்யப்படும்.

தொடர்புடைய இடுகை:
பிளாக்கர் மறுமொழியில் படங்கள் இணைக்க உதவும் NCcode
பிளாக்கர் மறுமொழிக்கு ரிப்ளை வழங்க NCreply

11 comments:

நீச்சல்காரன் said...

இங்க ஒரு கிணறு இருந்துச்சே பார்த்தேங்களா?

நீச்சல்காரன் said...

சாரி அது டெஸ்ட்டு கமெண்ட்டு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சரி,
அப்ப இதுவும்
டெஸ்ட் கமெண்டுதான்.

SURYAJEEVA said...

பகிர்வுக்கு நன்றி

dsfs said...

Good Post Sir. Thanks

rajamelaiyur said...

பயனுள்ள புதிய தகவல் நன்றி
வணக்கத்துடன் :
ராஜா

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நான் புது பதிவர். நீங்கள் கூறியபடி செய்து பார்க்கிறேன். தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

நீச்சல்காரன் said...

[@]c6554339943812534491[/@]நன்றி தொடர்ந்து வாருங்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

[@]c3144624578012234621[/@]சைடில் ஒரு கமென்ட் பாதி ஒளிந்தும் ஒளியாமலும் இருக்கிறது. எனக்கு மட்டுமா..? டெஸ்ட்.

நீச்சல்காரன் said...

@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
நீங்கள் எந்த பிரவுசர் பயன்படுத்துகிறீர்கள்? முடிந்தால் பிரச்சனையை களைய முனைகிறேன்