தமிழ் வலைப்பக்கங்கள், தமிழ்க் கோப்புகள் என பல இடங்களில் தமிழ் எழுத்தில்லாமல் விதவிதமான குறியீடுகளைப் பார்த்திருக்கலாம். அவை வேறு ஒரு தமிழ் எழுத்துருவில் இருப்பதை சிலர் அறிந்து, அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கி வாசிப்பர் அல்லது எழுத்துருமாற்றி மென்பொருளின் துணையுடன் விரும்பிய எழுத்துருவிற்கு மாற்றிப் படிப்பர். ஆனால் பொதுப் பயன்பாட்டிற்கு வந்த தமிழ் எழுத்துரு மாற்றிகள் பெரும்பாலும் பத்து பதினைந்து வகைகளை மட்டுமே மாற்றும் திறன் மிக்கது. மேலும் எந்த எழுத்துரு என்று அறிந்தபிறகே மாற்ற முடிந்தது. சில சமயங்களில் எழுத்துருவின் பெயர் தெரியாவிட்டாலும் குழப்பம் நிலவியது. அவற்றிற்கெல்லாம் தீர்வாகப் புதிய எழுத்துருமாற்றி ஓவன் அறிமுகமாகியுள்ளது.
http://dev.neechalkaran.com/oovan
எழுத்துரு(font) குறியாக்கம்(encoding) தொடர்பாக அடிப்படை நுட்பத்தை அறிய
இத்தொடரைப் படிக்கலாம். இத்தகைய பல எழுத்துரு நுட்பங்களில் அனுபவமில்லாத புதிய பயனர் ஒருவர் எளிமையாகப் படிக்க விரும்பினால் அவருக்கான கருவியாக இந்த ஓவன் இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் எந்த எழுத்துரு என்று தானாகக் கண்டு மாற்றிக் கொடுத்துவிடும். கூடுதலாகத் தட்டச்சு வழுக்களையும் நீக்கிவிடும். பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழில் இருந்த வலைப்பதிவுகள் பெரும்பாலும் இதர குறியாக்கத்தில் தான் எழுதப்பட்டன. பாமினி, ஆதவின், மயிலை, இந்தோவெப், ஸ்ரீலிபி, கணியன், சாப்ட்வியு, வானவில், அஞ்சல், இணைமதி, டிஸ்கி, டேம், டேப் எனப் பல குறியாக்கங்கள் இருந்தன.
சில உதாரண வேற்றுக் குறியாக்க வலைப்பக்கங்கள்.
https://sites.google.com/site/aranganarumai
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/sujatha.htm
https://www.studygs.net/tamil/attmotw.html
http://www.alhasanath.lk/mag/2013/february/files/assets/basic-html/page54.html
http://www.seithy.com/breifNews.php?newsID=97541&category=EntertainmentNews&language=tamil
https://www.studygs.net/tamil/attmotw.html
http://www.thiruarutpa.org/thirumurai/v/T191/romanized2/uykaith_thiruppathikam
www.maalaisudar.com/020807.shtml
kkalyan.tripod.com/novel2.html
http://cs.annauniv.edu/insight/Reading/index.htm
http://www.bairavafoundation.org/athmayoga.php
http://web.archive.org/web/20030213031414/http://www.vikatan.com/
http://tamil.joelonsoftware.com/
https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/4idlM8pdHKM
http://www.tamiloviam.com/html/Exclusive1.Asp
ஓவன் என்றால் ஓவியன் என்று பொருள். சீரற்ற வடிவங்களைச் சீராக்கி வரைவான். உணவைப் பக்குவப்படுத்துவது போல எழுத்துக்களையும் பக்குவப்படுத்தித் தருவான் இந்த ஓவன். |
மேலே உள்ள பக்கங்களில் உள்ளவற்றை நகலெடுத்து, ஓவனில் ஒட்டினால் சீராக்கி, ஒருங்குறியில் படிக்கத் தக்க வடிவில் தந்துவிடும். இவற்றைப் போல பல பக்கங்கள் உள்ளன. ஒருங்குறியில் மட்டும் தேடுவதால் கூகிளில் அதிகமாக, பிற எழுத்துரு கொண்ட பக்கங்கள் வருவதில்லை. autodetect என்று தேர்வு செய்தால் சுயயூகத்தால் எந்த எழுத்துரு என்று பயனர் சொல்லாமலே தானாகக் கண்டுபிடித்து மாற்றித் தரும். பயனரும் அதனை மாற்றிக் கொள்ளலாம். மாற்றப்பட்ட எழுத்துரு எது என்றும் கீழே காட்டிவிடும். ஆக ஒரு எழுத்துருவின் பெயரையும் இதன் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். இனி எந்தக் குறியாக்கம் என்ற குழப்பமில்லாமல் தமிழ்ப் பனுவலை(text) நேரடியாக இதில் இட்டு ஒருங்குறியில் மாற்றிப் படிக்கலாம். பி.டி.எப். கோப்புகளில் இயல்பாகவே குறிநீக்கம் இருப்பதால் அங்கே தமிழ் எழுத்துக்களை எளிதில் வாசிக்க முடியும். அதேவேளையில் நகல் எடுத்து வேறு இடத்தில் வெட்டி ஒட்டினால் வாசிக்க முடியாது. இம்மாதிரி சீரற்ற எழுத்துக்களை ஓவனில் இட்டு சீராக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய பழைய கோப்பு, ஒருங்குறி அல்லாத நாளிதழ், அரசு ஆவணம் என்று எழுத்துச் சிக்கலின்றி தமிழைப் பயனபடுத்தலாம். மேலும் நுட்பரீதியான குறியாக்கத்தையும் ஒருங்குறிக்கு மாற்றித்தரும். உதாரணம் ஜாவா ஸ்டிரிங்கில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் "\u0BA4\u0BAE\u0BBF\u0BB4\u0BCD\u0BA8\u0BBE\u0B9F\u0BC1" உலாவிகளில் முகவரியில் பயன்படும் யுடிஎப் குறியாக்கம் "%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" அல்லது எச்.டி.எம்.எல். பொதி தமிழ்நாடு என பல வகை நுட்ப வடிவங்களையும் படிப்பதற்கு ஏற்ப மாற்றித் தரும்.
உங்களுக்குப் பயன்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்க. இதில் சுமார் நாற்பது வகையான பிற குறியாக்கத்திலிருந்து ஒருங்குறிக்கு மாற்றினாலும் முன்பு பயன்பாட்டில் இருந்த பல இதர குறியாக்கங்கள் இணையத்தில் காணக் கிடைக்காததால் ஓவனில் அவை விடுபட்டிருக்கும். அத்தகைய விடுபட்ட குறியாக்க முறைகள் உங்களிடம் இருந்தால் அறியத்தரலாம். வழமை போல ஆலோசனைகளும், குறைகளும் வரவேற்கப்படுகின்றன.
16 comments:
நான்காம் தமிழுக்குத் தொண்டு செய்வதையே முழு நேரப் பணியாகக் கொண்டிருக்கும் தங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது! சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா!
அருமை.offline ல் பயன்படுத்தும்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
அருமையான முயற்சி
பாராட்டுகள்
நல்ல உபோயகமான தகவல் நன்றி
நேரடியாக தமிழ் pdf கோப்புகளில் [பல்வேறு குறியாக்கங்களில் உருவாக்கியவை] தேடுமாறு மென்பொருள் உருவாக்க இயலுமா? எசாலத்தான் சொன்னது போல இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தும் வசதி மிகப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சீரிய முயற்சிக்கு தமிழுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
@Rajkumar Ravi & எசாலத்தான்
இக்கருவிகள் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் உருவாக்கப்பட்டது, இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். saveas webpage என்று அக்கருவியை தரவிறக்கிக் கொள்ளலாம். எதிர்வரும் பதிவில் தெளிவாக விளக்குகிறேன். தெளிவான குறியாக்கம் கொண்ட பிடிஎப் ஆவணங்களுக்குத் தேடுகருவி எளிதில் உருவாக்கமுடியும்.
நன்றி. ஒருங்குறியில் உருவாக்கப்பட்ட தமிழ் pdf கோப்புகளை தேடுவது மிகுந்த சிரமமாக உள்ளது. எந்த PDF Viwer மென்பொருளிலும் எதிர்பார்க்கும் வசதி கிடைக்கப்பெறவில்லை
தங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். தயவு செய்து இண்டோவேர்டு பாண்டையும் பாண்ட் கன்வர்ஷனில் சேர்க்கவும். பயனுள்ளதாக இருக்கும். நன்றி
@GUNA SEKAR
ஒரு குறியாக்க முறைக்கு பல எழுத்துருக்கள் இருக்கும். அவ்வகையில் நீங்கள் குறிப்பிட்ட எழுத்துருவும் இதில் இதில் மாற்றப்படும்
தங்கள் தளத்தை இருநாள்களுக்கு முன்தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ஓவனின் வேகம் ப்ரமிக்க வைத்தது. 15 பக்க ஸ்ரீலிபி கோப்பு ஒன்றை ஒட்டி முடித்துக்கொண்டிருக்கையிலேயே ஒருங்குறிக்கு மாற்றி விட்டது. வேண்டுமென்றே நான் ஏற்படுத்திய சொற்பிழை, சந்திப் பிழைகளையும் திருத்தி விட்டது. நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். திரு எசாலத்தான் சொன்னதுபோல் இணைய இணைப்பில்லாமலும் பயனபடுத்த முடிந்தால் நல்லது. அதற்கான விளக்கமளிப்பதாகச சொல்லியிருக்கின்றீர்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். இதேபோல் ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வழி செய்தால், பேஜ்மேக்கர் போன்ற அச்சக மென்பொருள்களுக்கு உதவியாயிருக்கும்.
அருமை.ஏற்கனவே எழுத்துரு மாற்றுவதற்கு NHM coverter பயன்படுத்தி வந்தேன்.இனி ஒவனைப் பயன்படுத்துகிறேன். அதனை விட சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் நீச்சல் காரன்
பள்ளி விண்டோஸ் 10 மடிக்கணினியிலும் என் சொந்த Android mobile-லிலும் save as webpage வழி சேமித்து வைத்திருக்கிறேன். நன்றி.
இன்புட் கொடுத்த உடன் ஓவுட்புட் வரவில்லை
நமக்கு தேவையான தமிழ் ஃபான்ட்களை புதிதாக சேர்க்க வேண்டும்....
enakku divya tamil font add seyya vendum convert panna vendum
@srlayout, மாதிரி ஆவணத்தை எனது neechalkaran @ gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்.
Post a Comment