Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Saturday, March 17, 2018

Info Post
சென்னையில் மார்ச் 13 அன்று "Google for தமிழ்" என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் வலைப்பதிவர்கள், இணையத்தளத்தார், வெளியீட்டாளார்கள், யூட்யூப் காணொளி உருவாக்குநர் மற்றும் விளம்பர கூட்டாளர்கள் எனச் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூகிளுக்கு இது வணிக நிகழ்வு என்றாலும் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் win-win வாய்ப்பாகும்.
கூகிளில் ஒரு முக்கியத் தகவல் தொடர்பாகத் தேடினால் அதனைப்பற்றிய தகவல் சுருக்கத்தைப் பக்கவாட்டில் காட்டும். உதாரணம்,  ஸ்ரீதேவி  என்று தமிழில் தேடினால் அவர் பற்றிய சிறுகுறிப்பைக் காட்டும். இதனைத் தகவல் கோட்டுரு (knowledge graph) என்று அழைக்கிறோம். தற்போதைக்குத் தமிழ் உட்பட இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஆறு இந்திய மொழிகளில் இவ்வசதி உள்ளது. எனவே ஒரு பயனர் தமிழில் தேடினாலும் தேடப்படும் தகவலைப் புரிந்துகொண்டு இந்தச் சுருக்கத்தைக் காட்டுகிறது.

ஒரு மொழி கட்டுரையைப் பிற மொழியில் மொழிபெயர்த்துத் தரும் எந்திர மொழிபெயர்ப்பு (Neural Machine Translation) வசதி தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, சிந்தி, இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய பதினொரு இந்திய மொழிகளில் வழங்கிவருகிறது. இந்திய மொழிகளில் இது சிறப்பாக மொழிபெயர்க்காவிட்டாலும் ஓரளவிற்கு மொழிபெயர்க்கிறது என்பதே வரவேற்கத் தக்கது.

அண்மையில் வெளியிட்ட குரல் வழிகாட்டி (Voice Navigation) என்பது குரல் வழியாகவே கூகிள் வரைப்படத்தில் வழிகாட்டுதலைப் பெறும் வசதியாகும். கூகிள் வரைபடத்தில் நாம் பேசினாலே அதனைப் புரிந்து கொண்டு வழிகாட்டும் இந்த வசதி தமிழ் உட்பட இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளுக்கு உள்ளது.

இப்படி இந்திய மொழிகளில் கூகிள் செயல்பாட்டின் தொடர்ச்சியாக இந்தி, வங்காள மொழிக்குப் பிறகு தமிழ் மொழித் தளங்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ்  (Adsense)  வசதியை கடந்த மாதம் வழங்கியது. இதன் மூலம் தமிழ் உள்ளடக்கங்கள் இணையத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இணைய விளம்பர வணிகத்தில் தமிழும் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது. இதனை விளக்கவும், விளம்பரப்படுத்தவும் இந்நிகழ்ச்சியை கூகிள் ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் முதலில் தொடக்கவுரை  மற்றும் கலந்துரையாடலை வழி நடத்திய ஜெய்வீர் நாகி பிராந்திய மொழிகளில் உள்ள  விளம்பர வாய்ப்புகளை தெரிவித்தார். இணையத்திற்கு வரும் புதுப் பயனர்களின் ஒன்பதில் மூவர் பிராந்திய மொழிப் பயனர்களாவர். பத்தில் ஒன்பது விளம்பரங்கள் பிராந்திய மொழி விளம்பரமாகக் கொடுக்கவே விளம்பரதாரர் விரும்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தளங்களுக்கு இவ்வசதி கிடைத்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆன்லைனில் உள்ளூர் மொழி பயனர்கள் 23.4 கோடியாக உள்ள நிலையில், இது 2021ல் சுமார் 53.4 கோடியாக உயரும் என்கின்றனர். 5%ஆக உள்ள விளம்பர வருவாய் 35% ஆக ஐந்தாண்டுகளில் உயர்வதாகவும் 10,000கோடி ரூபாய் வர்த்தகம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர்.

கலந்துரையாடலில் டெட்டாயில், ஒன்இந்தியா, ரீட்எனிவேர், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவன நபர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ்ப் பயனர்கள் அதிகமாக மறுமொழி இடுகிறார்கள், தமிழ்ப் பயனர்களின் ஆண், பெண் விகிதாச்சாரம் உயர்வு, ஜியோ வருகைக்குப் பின்னர் யூட்பூப் பார்வையாளர் அதிகரிப்பு, தமிழில் அரசியல் மற்றும் சினிமா வாசகப் பரப்பு அதிகம் போன்ற செய்திகள் குறிப்பிடத்தக்கன.

இணைய வெளியீட்டு நுட்பங்கள் குறித்து கிளோ பச்சும்,  கூகிள் ஆட்சென்ஸ் விளக்கத்தை அஜய் லூத்தர், வீணா, சுருதி போன்றோரும், கூகிள் தேடுபொறியின் திறன் பற்றி சையித் மாலிக்கும், ஆட்சென்ஸ் கொள்கைகள் பற்றி ரிச்சாவும் விளக்கினார்.
எங்கே விளக்கப்பட்ட காட்சிப்படத்தை இங்கே காணலாம்.
http://services.google.com/fh/files/events/adsense_auto_ads_follow_up.pdf

பங்குபெற்றோரின் சில குறிப்பிடத்தக்கக் கேள்விகளும் பதில்களும்:

கூகிள் தேடலில் நமது தளங்கள் முன்னணியில்  வருவதற்கு செய்ய வேண்டியவை?
தளத்தைப் பொறுத்தவரை தலைப்பு (title) விவரிப்பு(description) சீரான அமைப்பு போன்றவை தேவை. பக்கத்தைப் பொறுத்தவரை படங்களுக்கு குறிப்புகள் (image alt) செய்திக்கு குறிச்சொல் போன்றவை தேவை. காப்புரிமை மீறல் இல்லாமல் தரமாக எழுதினாலே போதும். கூகிள் 200க்கும் மேற்பட்ட யுக்திகளால் ஒருவொரு பக்கத்தையும் தரப்படுத்திப் பட்டியல் இடுகிறது.

கூகிள் தேடலில் நமது தளங்கள் முன்னணியில்  வருவதற்கு சம்மந்தமில்லாத காரணிகள் எவை?
பக்கத்தின் வார்த்தைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, குறிச்சொற்கள் பரவலின் அடர்த்தி, link building, rich snippet போன்ற காரணிகள் தேவையற்றது.

கூகிளின் அடுத்த குரோம் உலாவியில் பதிப்பில் Ad-blocker எனப்படும் விளம்பரத் தடையைக் கொண்டுவரும் வேளையில் இந்த ஆட்சென்ஸ் வருவாய் பாதிக்காதா?
:ஆட் பிளாக்கர் சுமையான மற்றும் உறுத்தலான விளம்பரங்களையே தடைசெய்யுமே அன்றி எல்லா விளம்பரங்களையும் அல்ல

ஒரே மாதிரி டிராபிக் இருந்தும் இருதளங்களின் வருவாய் வேறுபாடுகள் ஏன்?
பார்வையாளரின் எண்ணிக்கை மட்டும் வருவாய்க்கான காரணி அல்ல. உதாரணம் இந்திய விளம்பரங்களின் விலையைவிட அமெரிக்க விளம்பரங்களின் விலை அதிகம். எனவே அந்நாட்டு பார்வையாளர் அதிகரித்தால் வருவாயும் அதிகரிக்கும். காப்பீடு, மின்னணு சாதனங்கள் விளம்பர மதிப்பு மற்றவற்றுடன் அதிகம். எனவே பார்வையாளர்களின் நாட்டுப் பொருளாதாரம், விளம்பரப்பொருள், விளம்பரதாரரின் மதிப்பு, சூழல் ஆகியவையும் காரணம்.


கூகிள் தொடர்பாகத் தமிழகத்தில் நடக்கும் முதல்நிகழ்வு இதுவாகும். தொடர்ச்சியாக இதுபோல நடக்கவும் கூகிள் விரும்புகிறது. வலைப்பதிவர் சந்திப்பு போன்ற தமிழ்ப் பயனர்களின் கூடலில் கூகிள் சார்பாகக் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. கூகிள் ஆட்சென்ஸை தளங்களில் இணைப்பதற்கான வழிமுறைகள் அடுத்த பதிவில் காணலாம்.

8 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைப் பதிவுகள் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பலாம்

pmeenak said...

அருமை நண்பரே அருமை. ஒரு கூட்ட நடவடிக்கைகள் குறித்த சிறப்பான விவரக் கட்டுரை.

Umaraj said...

வரமுடியாத என்னை போன்றவர்களுக்கு உங்கள் செய்தி பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி

Ramesh DGI said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி

இ.பு.ஞானப்பிரகாசன் said...

மிகவும் அரிய பதிவு! உண்மையில் முன்னணிச் செய்தி ஏடுகள் செய்ய வேண்டிய பணி இது. தனி ஒரு மனிதராக நீங்கள் இந்த விழாவைப் பற்றி இவ்வளவு அழகாகச் செய்தி திரட்டித் தந்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி!

Vignesh said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Disciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant
ESI & PF Consultant in Chennai
GST Consultant in Bangalore
GST Consultant in Chennai
GST Consultant in TNagar
GST Filing Consultants in Chennai
GST Monthly returns Consultant in Chennai
GST Tax Auditor in Chennai
GST Tax Auditors in Chennai
GST Tax Consultant in Bangalore

Vignesh said...

I would highly appreciate if you guide me through this.Thanks for the article…
Fluent English Speaking Centre
Best Coaching Centre for Spoken English
English Coaching Classes in Chennai
English Speaking Classes
English Speaking Classes in Chennai
English Speaking Classes in Karnataka
English Speaking Course in Bangalore
Spoken English Institutes in Chennai
Spoken English Institutions
Spoken English Training Institutes