Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Tuesday, October 29, 2019

Info Post
விசைப்பலகை என்பது நாம் எழுத நினைப்பவற்றை உள்ளீடு செய்ய உதவும் கருவியாகும். பொதுவாகவே கைப்பேசியில் ஒரு விசைப்பலகையிருக்கும் கூடுதலாக ஆண்ட்ராய்ட் கருவிகளில் விரும்பிய பல பலகைகளை வைத்துக் கொள்ளலாம். கூடுதாக விசைப்பலகையை நிறுவிக் கொள்ள ஒவ்வொரு இயங்குதளங்களிலும் பல குறுஞ்செயலிகள் வந்துவிட்டன. தமிழ் உள்ளீடு செய்ய உதவும் குறுஞ்செயலிகளை இக்கட்டுரையில் பார்ப்போம். கணினியில் தமிழ்த் தட்டச்சவும், குரல்வழி உள்ளீட்டிற்கும் இதர கட்டுரைகளைக் காணலாம்.https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin
கூகிளின் தயாரிப்பு இந்த ஜிபோர்ட். கூகிள் நிறுவனம் ஆண்டராய்ட் கருவிகளுக்கென இந்திய மொழி உள்ளீட்டுக் குறுஞ்செயலியைத் தனியாகத் தயாரித்து வெளியிட்டிருந்தது.  தட்டச்சு செய்வதற்கு மாறாக விரலாலோ, ஸ்டைலஸாலோ எழுதவிரும்புபவருக்குச் சிறந்த உள்ளீட்டுக் கருவி கூகிள் ஹான்ட்ரைட்டிங் கருவி. ஒரு கைப்பேசியில் ஒலி உள்ளீட்டுக்கென்றே அதாவது தட்டாமல் பேசினலேயே எழுத்துக்களாகக் காட்டும் தனிச் செயலியையும் கூகிள் வெளியிட்டிருந்தது. இப்படி இந்த மூன்றையும் ஒன்றாக்கி ஜிபோர்ட் என்ற பெயரில் இந்தச் செயலி அனைத்து வசதியையும் தருகிறது. பேப்பரில் எழுதுவது போல எழுதினால் அவற்றை எழுத்துணரி நுட்பத்தில் எழுத்துக்களை உள்ளீடு செய்து கொள்ளும். தமிழ் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுதலாம். உங்கள் சொந்த கையெழுத்தில் எழுதினாலே தானாகப் புரிந்து கொண்டு எழுத்துக்களை உள்ளீடு செய்து கொள்ளும். இந்திய இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழ் என்று நான்குவகை தமிழையும் குரல்வழியாகக் கேட்டு எழுத்தாக உள்ளீடு செய்து கொள்ளும். இதன மூலம் கைப்பேசியில் எந்த இடத்திலும் சரளமாகத் தமிழை உள்ளீடு செய்ய முடியும்

https://sellinam.com
செல்லினம் என்ற தமிழ்ச் செயலி மலேசியா நாட்டு அறிஞரால் 2003லேயே வெளியிடப்பட்டது. தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வெளிவரும் இச்செயலி கணினியில் தமிழ் உள்ளீடு செய்து பழகியவர்களுக்கு ஏற்ப விசை அமைப்பைக் கொண்டது. தமிழ்99, ஒலிபெயர்ப்பு ஆகிய இரு தட்டச்சு முறைகளும் கொண்டது. அதிகமான தமிழ்ப் பயனர்கள் பயன்படுத்தும் செயலி இதுவாகும். இது பல இயங்குதளங்களுக்கும் செயலிகளைக் கொண்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.nuance.swype.trial
புகழ்பெற்ற மற்றொரு செயலி ஸ்வைப் ஆகும். இது இலவசமாக இல்லாவிட்டாலும் சோதனைப்பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது. இதில் சுயதிருத்தம், அடுத்த சொல் யூகம், ஒலி-உரை மாற்றம் என பல வசதிகள் உள்ளன. ஸ்வைப் செய்தே அதாவது விரலை எடுக்காமல் தேய்தவாறே விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். தமிழ், ஆங்கிலம் உட்பட பல மொழிகளையும் உள்ளீடு செய்யலாம். ஒரே நேரத்தில் இருமொழிகளில் பயன்படுத்தலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.touchtype.swiftkey
தட்டச்சு செய்யும் போது அதிகப் பிழை வரும் என நினைத்தால் யூகித்து சரி செய்யும் செயலியாக ஷிப்ட்கீ இருக்கும். ஏறக்குறைய இரண்டு மில்லியன் தரவிறக்கம் கொண்ட இச்செயலியில் விருப்பம் போல விரல்களுக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிக் கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் உட்பட நூறு மொழிகளில் எழுதலாம், மேலும் ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உள்ளீடு செய்யலாம். ஒவ்வொரு பயனருக்கும் ஏற்ப அகராதிச் சொற்கள் சேர்க்கப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.paninikeypad.tamil
இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தந்து உருவாக்கப்பட்ட செயலி பாணினி. தமிழைப் பொறுத்தவரை தேவைக்கு ஏற்ப வெறும் 11 எழுத்துக்கள் மட்டும் திரையில் காட்டுவதால் விரைவாக அடிக்கமுடிகிறது. மற்ற செயலிகளைப் போல சொல் யூகம், எமொஜி போன்ற வசதிகள் உள்ளன. மொத்தம் 14 இந்திய மொழிகளைக் கொண்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.sps.tamil26keyboard
எந்தவொரு சிறப்பு அனுமதியும் இன்றி நிறுவிக் கொள்ளலாம். 26 எழுத்து விசைப்பலகையுடன் தமிழில் உள்ளிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய பலகை என்பதால் கைப்பேசியின் திரை அதிகமாக மறைக்கப்படுவதில்லை.

https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&hl=en
தமிழா குழுவினரால் வடிவமைக்கப்பட்ட தமிழ் உள்ளீட்டுப் பலகை இதுவாகும். தமிழ்99 தட்டச்சு முறையில் விசைப் பலகை இருப்பதால் இம்முறையில் கணினியில் அடித்துப் பழகியவர்களுக்கு மிகவும் பயன்படும். மேலும் இதுவொரு திறமூல மென்பொருளாகும்.

https://play.google.com/store/apps/details?id=iit.android.swarachakraTamil
ஸ்வரச்சக்ரா என்ற பெயரில் ஐ.ஐ.டி. பாம்பே நுட்பவியலாளர்களால் தமிழ் உள்ளீட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிபோல அல்லாமல் இதில் புதுமையாக மெய் எழுத்து ஒன்றை அழுத்தினாலே அதன் உயிர்மெய் எழுத்துக்கள் சுற்றியே வந்துவிடுகிறது. தட்டச்சு முறை தெரியாதவர்கள் உள்ளீடு செய்ய ஏதுவாக உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.srctechnosoft.eazytype.tamil.free
மற்றொரு தமிழ் உள்ளீட்டுச் செயலி இதுவாகும். ஆங்கில எழுத்தில் தங்கிலிஷில் அடித்துப் பழகியவர்களுக்கு மட்டும் பயன்படும். ஆங்கில விசைகளை அழுத்தி, தமிழில் எழுதும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.sparsh.inputmethod
பொதுவான விசைப்பலகை போல அல்லாமல் மாறுபட்டு, ஒரு மெய்யெழுத்தை அழுத்தினால் அதன் உயிர் மெய்யெழுத்துக்களைக் காட்டும், அதன் மூலம் தட்ட வேண்டும். ஆங்கில விசைப்பலகையின் துணையின்றி தமிழ் எழுத விரும்புபவர்களுக்கு உதவும். ஒரு லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.

மேலும் இதர

https://play.google.com/store/apps/details?id=com.azhagi.inputmethod.azhagi
https://play.google.com/store/apps/details?id=com.sriandroid.justtamil
https://www.microsoft.com/en-us/store/apps/type-tamil/9wzdncrfhz2g (விண்டோஸ் கைப்பேசி)
https://www.microsoft.com/en-us/store/apps/tamil-keyboard/9nblggh08qjc (விண்டோஸ் கைப்பேசி)
https://www.microsoft.com/en-us/store/p/tamil-visai/9wzdncrdf11m(விண்டோஸ் கைப்பேசி)

இவற்றில் ஒன்றைக் கைப்பேசியில் கொண்டு தமிழில் எழுதுவோம் தாய்மொழியில் பழகுவோம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"இதை விட என்ன வேண்டும் ?" - என்பது போல், அனைத்து நுட்பங்களும் பயனுள்ளவை... நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

பயனுள்ள பதிவு