கடந்த சில மாதங்களாக வெளிவந்த சின்னசின்ன மேம்பாடுகள் குறித்த அறிவிப்பு.
கிரந்தம் நீக்கி
கிரந்தம் நீக்கி எழுத சில ஆர்வம் கொள்வார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு, கிரந்தம் நீக்கலுக்கான விதிகளுடன் கிரந்தம் நீக்கித்தரும் கருவி வெளியிடப்பட்டது. விதிகளும் அங்கேயே உள்ளன.
https://vaanieditor.com/grantham
விடுபட்ட விதிகளை உதாரணங்களோடு தரலாம்.
கலைச்சொல் தரவகம்
கோட்டாளம் அவர்களின் கலைச்சொல் தரவகம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனிமுயற்சியில் சேகரிக்கப்பட்ட சுமார் 1.16 லட்சம் கலைச் சொற்களைக் கொண்டுள்ளது.
https://oss.neechalkaran.com/dictionary/
தமிழ் எழுத்துரு
செனட் செந்தில் உருவாக்கிய தமிழி உட்பட நான்கு புதிய தமிழ் எழுத்துருக்கள் இங்கே சேர்க்கப்பட்டுள்ளன. முன்தோற்றம் பார்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்
https://oss.neechalkaran.com/tamilfonts/?preview=Tamilri_Chenet
திருக்குறள் தரவுத்தொகுப்பு
பல ஆங்கில இலக்கியங்கள் இயந்திரவழிக் கற்றலுக்கு உதவும் வகையில் தரவுத்தொகுப்புகளாக(dataset) இணையத்தில் உள்ளன. அவற்றை யாரும் எளிதில் எடுத்தாய்வு செய்ய முடியும். ஆனால் தமிழில் பெரும்பாலும் உரைத்தொகுப்பாகத்(text) தான் உள்ளன. தற்போது திருக்குறளுக்கான சுமார் பதின்மூன்று உரைகள் தரவுத் தொகுப்பாக மாற்றி வெளியிடப்பட்டுள்ளன. பொதுவான ஆய்வுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் இயந்திரவழிக் கற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
https://www.kaggle.com/datasets/neechalkaran/thirukkural
மேலும் பல உரையாசிரியர்களின் உரைகள் பிடிஎப் வடிவிலேயே உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உதவினால் அவற்றையும் தரவுத் தொகுப்பாக மாற்ற முடியும்.
ஆய்வுத் தேடல்
https://oss.neechalkaran.com/thesis_search
பொதுவாகவே முனைவர் பட்டம் உட்பட பெரும்பாலான பட்ட ஆய்வுகள் இணையத்தில் தற்போது கிடைத்து வருகின்றன. ஆனால் கூகிளில் ஆய்வுத் தளங்களில் மட்டும் தேடி எடுப்பது சற்று சிரமம். கூகிள் ஸ்காலரில் தமிழுக்கான தளங்கள் என வகைப்பாடு இல்லை. எனவே அறிவுத் திருட்டு சோதனை செய்யவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் ஆய்வுக் கட்டுரைகளைத் தேடும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய தேடுபொறி இடைமுகம் அறிமுகமாகியுள்ளது. இது கூகிளை மையமாக வைத்துச் செயல்படுகிறது. ஆனால் ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே காட்டும். ஏதேனும் விடுபட்ட தமிழ் ஆய்வு இதழ்களின் இணையத்தளங்கள் இருந்தால் அறியத் தரலாம். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1 comments:
திருக்குறள் தரவுத்தொகுப்பு அவசியம் எனக்கு உதவும்... நன்றி...
Post a Comment