கோப்பு உள்ளீடு
தட்டச்சு செய்தோ அல்லது நகலெடுத்து ஒட்டியோ பிழை பார்க்காமல் நேரடியாக ஒரு நூலை ஆய்வு செய்து அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டும் வசதி ஆங்கிலம் போன்ற மொழிகளில் இணையத்தில் உள்ளது. அந்த வசதி சில மாதம் முன்னர் வாணியில் அறிமுகமானது. மின்னூல் அல்லது அச்சு நூல் வெளியீட்டிற்கு முன்னர் பதிவேற்றி (.docx .rtf .txt) இதில் சோதித்துப் பார்க்கலாம். செயல்முறை விளக்கம்:
குரோம் உலாவி:
பொதுவாக இணையத்தில் ஏதேனும் தட்டச்சு செய்தால், வாணி தளத்திற்கு வந்துதான் கோப்பாகவோ, உரையாகவோ இட்டுத் திருத்த இயலும். அண்மையில் அறிமுகமான வாணி பிழை திருத்தியின் குரோம் நீட்டிப்பு வழியாக டிவிட்டர், பேஸ்புக், விக்கிப்பீடியா உட்பட பெரும்பாலான இணையத்தளங்களில் தட்டச்சு செய்யும் இடைமுகத்திலேயே பிழை சோதனை செய்ய முடியும். ஆங்கிலத்தில் உள்ள கிராமர்லி போன்று நேரடியாக, பிழை திருத்த முடியாவிட்டாலும், பரிந்துரைகளை அளிக்கிறது. அது தொடர்பான விளக்கக் காணொளி.
இதர குறியாக்கங்கள்:
பொதுவாக ஒருங்குறியில் தான் பொரும்பாலான மொழிக் கருவிகள் செயல்படுகின்றன. ஆனால் சில பதிப்பகங்கள்/அலுவலகங்கள் இன்னும் ஒருங்குறிக்கு மாறவில்லை அவர்களுக்கு உதவும் பொருட்டு, ஒருங்குறி அல்லாத(Baamini, Vaanavil, TAM, TAB, TSCII) குறியாக்கங்களையும் ஏற்கும் வசதி அண்மையில் அறிமுகமானது. அதில் தமிழ் உள்ளடக்கத்தை ஒருங்குறிக்கு மாற்றாமல் எழுத்துப் பிழை, சந்திப் பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும். எப்படித் திருத்தலாம் என்பது குறித்த செயல் முறை விளக்கம்
https://www.youtube.com/watch?ஏற்கனவே சுமார் 50 குறியாக்கங்களை ஓவன் மூலம் ஒருங்குறிக்கு மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் உள்ள சில முக்கியக் குறியாக்கங்கள் மட்டும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. வேறு குறியாக்கங்களுக்குப் பிழைதிருத்த வசதி தேவைப் பட்டால் அறியத் தரலாம்.
பொதுவான செயல்முறை விளக்கம்
3 comments:
சிறப்பு...
நன்றி...
மிகவும் பயனுள்ள தகவல்கள் 💐💝
அருமை நண்பரே. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
Post a Comment