Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Friday, February 12, 2010


கூகிள் என்ற மாபெரும் இணைய சக்தி அண்மையில் கூகிள் பஷ் என்ற சேவையை பேஷ்புக், டிவிட்டருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியது. நல்லதொரு சேவைதான். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதன் பயன்பாட்டில் மிகப்பெரிய 'loop hole'லாக தகவல் திருட்டுக்கு துணைபுரிகிறது. கூகிள் சமூக வலைப்பின்னலையும், வணிகப்பின்னலையும், போட்டுக் குழப்பி பெரிய தவறைப் புரிந்துவிட்டது. தவறாக கருதக்காரணம் அந்த பஷ் சேவையை உயிரூட்டியப்பின் நமது இ-மெயில் தொடர்புகள் அனைத்தும் நமது அனுமதியின்றி வெளியுலகிற்கு போதுவுடைமையாக்குகிறது, இதன் மூலம் நமது இமெயில் தொடர்புகள் அனைத்தும் நமது பாளோயர்களாக மாற்றுவதனால் எளிதாக வேறுமனிதர்கள் நமது தொடர்புகளை அறியமுடிகிறது. இங்கே கவனிக்கவேண்டியது என்னவென்றால் வணிகரீதியாகவோ, தனிப்பட்ட நட்பாகவோ நாம் வைத்திருக்கும் இமெயில் தொடர்புகள் போதுவுடைமையாக்கப்படுவது தகவல் திருட்டுக்கு துணைபோகுமென்பதில் ஐயமில்லை. அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே சில சம்பவங்கள் நம்மையும் சற்று சிந்திக்கவைக்கிறது. உ.தா.) ஒருவர் இரண்டு வேறுப்பட்ட கம்பெனியுடன் ரகசியத் தொடர்புவைத்திருந்தால்  பஷ்ஷின் மூலம் தொடர்புகள் வெளியுலகிற்கு வெளிவரும், இங்கே தகவல் உரிமைமீறப்படுகிறது (Serious Privacy Flaws‎)

எந்தவொரு மென்பொருளும் தகுந்த சோதனைக்குட்பட்டு தான் வெளிவரும் அப்படி வந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆனால் கூகுளில் மாற்று ஏற்பாட்டிலும் ஓட்டையுள்ளது. பஷ்ஷை turn off செய்தாலோ அல்லது settings->label->hide செய்தலோ பஷ்ஷை விட்டு வெளிவந்துவிட்டதாக எண்ணமுடியாது காரணம் இவை வெறும் பஷ்ஷை மறைக்கத்தான் செய்கிறது. உண்மையில் வெளி உலகில் உங்கள் தகவல் அனாமத்தாகத்தான்யுள்ளது எவரும் எவருடையத்தொடர்பையும் கண்டுவிடலாம். சமூக தளத்தில் உள்ளவர்களைவிட வியாபாரரீதியாக ஜிமெயிலை பயன்படுத்துபவர்களுக்கு இது பேரிடர்.

இதற்கான பணிகளை கூகிள் தொடங்கிவிட்டாலும் முழுவதுமாக விலகக்கூடிய வசதியை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. எனவே புதிதாக பஷ் பயன்படுத்த எண்ணுபவர்கள் சற்று யோசித்து தொடங்கவும். 
 நல்ல அறிமுகம்தான் ஆனால் தகுந்த வழிமுறை செய்யாவிடில் பஷ் புஷ்ஷா? என்ற கேள்வி வரும்.

ஏற்கனவே ஆரம்பித்தவர்கள் தவிர்க்க எண்ணினால் சில யோசனைகள் (இவை ஓரளவு பயன்தரும்)

1- மேற்குறிய படி turn off அல்லது settings->label->buzz->hide செய்யலாம்

2-உங்கள் profile பக்கத்தை முழுவதுமாக நீக்கிவிடுங்கள் உதா. http://www.google.com/profiles/*********

3-உங்களை பின்தொடரும் நபர்களை block செய்யுங்கள் நீங்கள் பின்தொடருபவரை unfollow செய்யுங்கள்.

ஒரு விஷயம் 

நமது யாஹூ தொடர்புகளோ அல்லது வெற்றுத் தொடர்புகளோ வெளியே தெரிவதில்லை 

ஆனால் வலையுலகிற்கு இவை பெரிய வரப்பிரசாதம்தான் (*conditions applied)

பிற்சேர்க்கை:
பிப்18 2010 ன் படி பஷ்க்கு ஒரு கட்டுப்பாட்டை அறிமுகம்செய்துள்ளது கூகிள்.
செட்டிங்க்ஸ்ல் பஷ்ஷுக்கு தனி வசதியை செய்துள்ளது அதனை திருத்துவதன் மூலம் பஷ்ஷை பயன்படுத்தலாம். gmail->settings->buzz
related information:

12 comments:

Sugumarje said...

நானும் இப்படித்தான் யோசித்தேன்... எனக்குக்கூட சரியாக இருக்கலாம், ஆனால்...என் நம்பிக்கைகுரியவர்களின் ரகசியங்கள்...அம்பேல்... நல்லவேளையாக நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

நீச்சல்காரன் said...

நீங்கள் அழைப்புக் கொடுக்காமலே அனைவரையும் பஷ் அடைந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டவருக்கே இந்த பாதுகாப்பின்மை.
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி

Praveenkumar said...

பயனுள்ள பதிவு. நானும் பஷ்சில் இப்படித்தான் தெரியாத்தனமா சோ்ந்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி.

balavasakan said...

அடப்பாவி.. ஏன் உப்பிடி ஒரு ஓட்டையை கூகிள் விட்டது..

நீச்சல்காரன் said...

பிரவின்குமார்,
Balavasakan,
கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். கூகிள் ஒரு நல்ல தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கலாம்

சரவணகுமரன் said...

அட ஆமாம்...

ஸ்ரீராம். said...

நான் அது என்ன என்று திறந்துதான் பார்த்தேன். வேறு ஒன்றும் 'ஓகே' யோ 'அக்செப்டோ' தரவில்லை. ஆனாலும் பzz என்று இன்பாக்ஸ் க்கு கீழே நிற்கிறது. அது நான் உபயோகிக்கத் தொடங்கி விட்டேன் என்று அர்த்தமா?

cheena (சீனா) said...

தெரிந்தோ தெரியாமலோ பஸ்ஸில் ஏறியாகி விட்டது - இனி நடப்பது நடக்கட்டும் - பார்ப்போம் -

நீச்சல்காரன் said...

சரவணகுமரன்,
cheena (சீனா),
கருத்தை பகிர்ந்ததற்கு நன்றிகள்

நீச்சல்காரன் said...

ஸ்ரீராம்,
தங்கள் அனுபவத்தை வைத்துப்பார்த்தால், BUZZ தானாகவே சேர்கிறது போல அப்படியானால் யாரும் தப்பமுடியாது போல. தவிர்க்க வேண்டிய தொடர்புகள் இருந்தால் அந்த தொடர்புகளை அழித்துவிடுங்கள்.

ராமகிருஷ்ணன் த said...

If you want to use Buzz but hide your personal
then goto Settings->buzz
then
choose Do not show these lists on my public Google profile.

நீச்சல்காரன் said...

of course, you may right however, without my knowledge how google can broadcast my contact list as public as default?
any how thanks for your valuable comment Mr.ராமகிருஷ்ணன்