Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Monday, January 24, 2011

பதிவை ரீடரில் விட்டால் ஓட்டுக்கள் விழாது என்று பாதிப் பதிவை மட்டும் ரீடரில் நம்மில் சிலர் விடுவதுண்டு, இந்த நிலையில் தான் ரீடரில் ஓட்டுச்சுட்டிக்கான தேவை வந்தது. ரீடரில் படித்தவாறே ஓட்டிடும் வசதி இருந்தால் எப்படியிருக்கும்? முக்கியமாக அலுவலகத்தில் ப்ளாக் தடை செய்யப்பட்டவர்களுக்கு. தற்போதுள்ள ஓட்டு நடைமுறையில் தமிழ்மணத்தை இணைப்பது காதைச் சுற்றி மூக்கை தொடுவது போலாகும். அதைத் தவிர ஓட்டுப்பட்டை வழங்கும் சில திரட்டிகளுக்கு மட்டும் ரீடருக்கான ஓட்டுச் சுட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இணைத்தப் பின் இப்படி தெரியும்
கூடுதல் செய்தி:
இந்த ஓட்டுச்சுட்டி மின்னஞ்சல் வாசகருக்கும் செல்லும்


feedburnerக்கு புதியவரென்றால், feedsburnerல் கணக்கைத் தொடங்கி உங்கள் ஓடையை[feeds] கொடுக்கவும்
blogger dashboard-> settings->sitefeed-> Post feed redirect URL பகுதியில் feedburner முகவரியைக் கொடுக்கவும்.அடுத்து,
optimize-> feedflare -> add new flare அங்கே கீழுள்ள கோடைக் கொடுத்து, டிக்கடித்து சேமித்துக் கொள்ளவும்.

இன்ட்லி ஓட்டுப் பட்டை
http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/indli-nvb.xml
தமிழ்10 ஓட்டுப்பட்டை
http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/tamil10-nvb.xml
இது பக்கத்தை நேரடியாக மறுமொழிப் பகுதிக்கு அழைத்துச் செல்லும்.[அதிக டிராப்பிக்கில் இது கொஞ்சம் ஜாம் ஆகும் பட் நம்மூரு வண்டி] http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/reader2c.xml

அதிக வாசகர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் ஓட்டுச் சுட்டியில் மேம்பாடுகள் செய்யப்படலாம். மேலும் பல திரட்டிகளுக்கு ஓட்டுச் சுட்டி தயாரிக்கப்படலாம்.

disclamier
feedburner தமிழ்மணத்தில் செய்யும் பிரச்சனை இரண்டு ஒன்று தமிழ் மணத்தில் பதிவர் பெயரை காட்டாமல் இருப்பது, மற்றொன்று ஓட்டுப் போட தடுப்பது. இவ்விரண்டிற்கும் தமிழ்மணத்தைப் பயன்படுத்துவது எப்படி என்ற பதிவில் விடை இருக்கிறது. எல்லாம் செய்தும் தமிழ்மணத்தில் உங்கள் தளம் பிரச்சனை செய்தால் feedburnerஐ தவிர்க்கலாம்.

ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய பதிவு பிரச்சனை ஆகிறது எனக் கருதி அப்பதிவை நீங்கள் delete செய்திருக்கலாம். ஆனால் அவை உண்மையில் ரீடரில் cache சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று தெரியுமா!. அதாவது ரீடரில் படிப்பவர்கள் நீங்கள் எதை delete செய்தீர்களோ அவற்றைப் பார்க்கமுடியும். பதிவிட்ட ஒரு பதிவை delete செய்வதை விட edit செய்து மறுபிரசுரம் செய்வதே சிறந்த முறையாகும். அதுவும் மீறி deleteபட்ட பதிவை திருத்த அதன் postid இருந்தால் http://draft.blogger.com/post-edit.g?blogID=<உங்கள் ப்ளாக் ஐடி>&postID=<போஸ்ட் ஐடி> என்கிற முறையில் திருத்துக் கொள்ளலாம்.பிளாக்கரைப் பொறுத்தவரை எந்தப் பதிவை publish செய்தாலும் அவற்றை நிரந்தரமாக அழிக்கவே முடியாது ப்ளாக்கரும் அப்பதிவை அழிப்பதில்லை நீங்கள் dashboardலிருந்து அழித்தாலும் பிளாக்கர் மறைத்து வைத்துக் கொள்ளும். எனவே அந்தப் பதிவின் postid என்ன என்று தெரிந்தால் அதை மீண்டும் பதியவோ அல்லது திருத்தவோ செய்யலாம். postid தெரியாமல் அழிக்கப்பட்டிருந்தால் சில சமயம் கூகிள் தேடலில் அந்தப் பதிவின் cached file source code மூலம் எடுக்கலாம். பல சமயம் எடுக்கமுடியாமலும் போகலாம். அதனால் சிறந்த வழிமுறை எந்தப் பதிவை delete செய்தாலும் அவற்றின் contentயை நீக்கிவிட்டு செய்யவும் அல்லது edit செய்து மீண்டும் அப்பதிவை publish செய்யவும்

உங்களுக்கு இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு மசாலாப் படங்கள் சம்மந்தமான பதிவுகள் பிடிக்கும் மற்றவருக்கு உண்மையிலேயே மசாலா போட்ட சமையல் பதிவுகள் பிடிக்கும். நீங்கள் ரீடரில் ஷேர் செய்யும் பதிவுகளில் இவ்விரண்டும் கலந்து ஒரே காரமாக இருவருக்கும் குழப்பும். இங்கே இரண்டு வகையாக ஷேர் செய்யும் வசதியிருந்தால் இருவரும் தனித் தனி ஓடையில் பின் தொடர்வார்களே!
எப்போதும் போல சமையல் பதிவுகளை சமையல் tagல் போடவும், படங்கள் பதிவை சினிமா tagல் போடவும் அடுத்து settings->Folders and Tags சென்று வேண்டிய tag பக்கத்தில் உள்ள வளையத்தை சொடிக்கி பகிர்ந்தால் view public page என்றொரு புது லிங்க் கிடைக்கும் அதுவே இந்த வகை tagகளின் ஓடையின்[feeds] முகவரி. இந்த வகையில் அதிகாமான வகைகளில் ஷேர் செய்யலாம்.
tag வகை பகிர்வு இப்படியிருக்கும்
https://www.google.com/reader/shared/user/13137783136392365670/label/shared

இது போன்ற ஓடைகளைக் கொண்டு உங்கள் தளத்தின் ஒரு புறம் படித்ததில் பிடித்தது என்று ஒரு விட்ஜெட்டையும் இணைக்கமுடியும். அதற்கு add gadget -> feeds என்ற கட்ஜெட்டில் இம்முகவரியைக் கொடுத்துப் பெறலாம்.

தமிழில் ரீடர் வழியாக எனக்குத் தெரிந்து ஷேர் செய்யும் ஓடைகள்
http://www.google.com/reader/shared/vasanth1717
http://www.google.com/reader/shared/giblogs
http://www.google.com/reader/shared/sshakthi

feed settingsல் ஒரு தளத்தின் பதிவை கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் வரிசைப்படுத்த முடியும். அப்படியே play செய்து ஒரு ஸ்லைடு ஷோ போலவும் பதிவை படிக்கமுடியும்.

உங்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட வகைப் தளங்களை பொட்டலாம் கூட போடலாம். அந்த தளங்களை ஒரு folderக்குள் போட்டு create bundle என்று தேர்வு செய்வதன் மூலம் எல்லாம் ஒரே feed போல மாறிவிடும் அடுத்தவருக்கும் கொடுக்கலாம்.
உதாரணம் கணினி பதிவுகளை எல்லாம் ஒரு பொட்டலாமாக படிக்க இதைப் பயன்படுத்தலாம்.
http://www.google.com/reader/bundle/user/09530948931835236695/bundle/Tamil Language Computer Blogs
உபயம் http://www.suthanthira-menporul.com

எல்லாவற்றையும் விட ரீடரில் படிப்பதால் இன்டர்நெட் செலவும் குறையும்.

அது போக நீங்கள் மற்ற தளங்களில் போடும் மறுமொழியைத் திரட்டும் இந்த மறுமொழித் திரட்டியும் கூகிள் ரீடரில் சிறப்பாக செயல்படுகிறது.

திரட்டிகளுக்குப் பஞ்சமில்லை ஆனால் சில பல காரணிகளால் நல்ல எழுத்துக்கள் சில வெளியே வருவதில்லை. இதற்கு மாற்றாகத் தொடங்கிய மாற்று வாடாத பக்கங்கள் ஏனோ தற்போது புதிபிக்கப் படுவதில்லை. ரீடரில் படிப்பவர்கள் தங்களுக்குப் பிடித்துப் போன இடுகைகளை அங்கே பகிர்கிறார்கள். அதில் அதிகமாக சிறந்தப் பதிவுகள் வருவதை காணமுடிகிறது. அதிகமான வாசகர்கள் ரீடரில் பகிர ஆரம்பித்தால் அவரவர் பகிர்வதை சிறந்த வடிவில் தானியங்கியாகத் தொகுத்து ஒரு பக்கத்தில் விடமுடியும். இதனால் நல்ல பதிவுகள் விடுபட வாய்ப்பில்லை மற்றும் தானியங்கியாக திரட்டுவதால் சிரமமும் இல்லை.

ஹலோ ரீடரில் படிக்க கிளம்பீடிங்களா!!!!

தொடர்புடைய பதிவு கூகிள் ரீடர் தெரிந்தும் தெரியாததும்-முதல் பகுதி

15 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவல்களை தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும் விளக்கியுள்ளீர்கள் அருமை நண்பரே

பகிர்வுக்கு நன்றி

ம.தி.சுதா said...

மிக்க நன்றி இப்படியொன்றும் இருப்பது இப்பத் தான் தெரிகிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

வரதராஜலு .பூ said...

சூப்பர் தகவல் நண்பரே. பகிர்வுக்கு நன்றி

நீச்சல்காரன் said...

@மாணவன்
@ம.தி.சுதா
@வரதராஜலு .பூ
வாங்க, கருத்துக்கு நன்றிகள். ரீடரில் ரீட் செய்ய ரெடியா!!!!

அரபுத்தமிழன் said...

தற்போதுதான் ரீடருக்கு மாறியுள்ளேன். பின்னூட்டம் இட/படிக்க வசதிகள் உண்டா, ஏனெனில் இதற்காகவே டாஷ்போர்டு வரவேண்டியுள்ளது.

ஆர்வா said...

வாவ்.. மிகவும் பயனுள்ள பதிவு.. நீண்டநாட்களாக தேடிக்கொண்டிருந்தது.. மிக்க நன்றி நண்பரே

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

ரேவா said...

பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு நன்றி சகோதரா

Philosophy Prabhakaran said...

மிகவும் பயனுள்ளதாக அமைந்தது... நன்றி...

நீச்சல்காரன் said...

@அரபுத்தமிழன்
நீங்கள் ரீடரில் பின்னூட்டம் இடலாம் அது ரீடர் வாசகருக்கு மட்டுமே தெரியும். தளத்தின் பின்னூட்டத்தைப் படிக்க சென்ற பகுதியில் கூறியபடி http://site address.blogspot.com/feeds/comments/default என பின் தொடரலாம்.

calmmen said...

மிகவும் உபயோகம் நன்றி

கிரி said...

முயற்சித்து பார்த்து கூறுகிறேன்.

கிரி said...

முயற்சித்து பார்த்து கூறுகிறேன்.

ரசிகன் said...

அண்ணா! கலக்கறீங்கண்ணா. Feed burner அப்படிங்கற விஷயமே எனக்கு புதுசு. நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கேன். பயன் படுத்தி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன்.

Joealce said...

அண்ணா! கலக்கறீங்கண்ணா. Feed burner அப்படிங்கற விஷயமே எனக்கு புதுசு. நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கேன். பயன் படுத்தி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றேன்.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அட்டகாசம்!! நானும் இந்தப் புதிய பட்டைகளை பீட்பர்னரில் இணைத்துக் கொண்டேன். மிக்க நன்றி!