Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Friday, January 21, 2011

அலைபேசி எண் பெயர்ச்சி முறை இந்தியாவில் அமல் ஆகிவிட்டதென்பது தெரியும் ஆனால் அது சம்மந்தமான அடிப்படை சந்தேகங்கள் இருந்தால் இப்பதிவு உதவலாம்.

அலைபேசி எண் பெயர்ச்சி [MNP] என்றால் என்ன?
அலைபேசியின் எண் மாறாமால் உங்கள் சேவை நிறுவத்தை மாற்றும் முறை. அதன் பின்னர் புதிய நிறுவனத்தின் கீழ் கட்டணங்களை செலுத்தி சேவையைப் பெறலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கருதி தரமான போட்டி தொலைதொடர்பு துறையில் நடக்கலாம்.

யார் யாரெல்லாம் எண்களை மாற்ற முடியும்?
ஒரு நிறுவத்தின் தொலைபேசி எண்ணை குறைந்தது மூன்று மாதங்கள் பயன்படுத்திய சந்தாதார்கள் அனைவராலும் மாற்றமுடியும். இவை GSM அல்லது CDMA எதுவாகவும் இருக்கலாம் அதுபோல postpaid அல்லது prepaid ஆகவும் இருக்கலாம் ஆனால் அலைபேசி எண்களை மட்டுமே landline எண்களுக்கு தற்போது இல்லை. மேலும் எண்களை எல்லைகள் தாண்டி(inter circle portablity) மாற்ற முடியாது அதாவது புனேவில் உள்ள ஒரு எண்ணை மதுரை எண்ணாக மாற்றமுடியாது.

எண்ணை மாற்ற எவ்வளவு செலவாகும்? பழைய பாக்கியையும் மாற்றமுடியுமா?
TRAI யின் உத்தரவு படி அதிகபட்சமாக Indian Rupee 19 கட்டணமாகவும், ஏழு அலுவல் நாட்களும் செலவழிக்க வேண்டும். அதுபோக prepaid டாகயிருந்தால் பழைய கணக்கில் உள்ள தொகை புதிய கணக்கிற்கு மாற்றப்படாது postpaidடாகயிருந்தால் நிலுவை தொகையை கட்டிய பின்னரே மாற்றமுடியும்.

எண்ணை மாற்ற வழி முறை என்ன?
1) PORT (இடைவெளி) உங்கள் எண் என்று 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் (SMS கட்டணங்கள் உண்டு) உதா. "PORT 9090909090"
2)அனுப்பியவுடன் 8 இலக்க unique porting id கிடைக்கும். இது 24 மணி நேரம் மட்டும் தான் செயலில் இருக்கும்
3) அந்த id உடன் எந்த புது நிறுவனத்திற்கு செல்கிறீர்களோ அவர்களிடம் அடையாள சான்றுகளுடன் அவர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
4) எண் பெயர்ச்சி நடக்கும் அந்த இரண்டு மணி நேரங்களை முன் கூட்டிய உங்களிடம் அறிவிக்கப்படும் அதன்பிறகு புதிய SIM அட்டையை உள்ளீடு செய்து பயன்படுத்தலாம்.

மாற்றியப்பின் திரும்ப மாறமுடியுமா?
விண்ணப்பித்து 24 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற்றால் தலை தப்பிக்கலாம் இல்லாவிட்டால் அடுத்த 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

MNPயின் அமைப்புமுறை பார்வை?
ஒரு சேவைதாரரிடமிருந்து மற்றவரிடம் மாறும் போது வாடிக்கையாளர் தங்கள் அலைபேசி எண்ணை தக்கவைத்துக் கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட முறையாகும். இதில் பழைய மற்றும் புதிய தொலை சேவை நிறுவனங்கள் மற்றும் இடைமுகமாக MNP வழங்குநர் என்ற மூன்றின் தலையீட்டால் நடைபெறும். வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை MNP வழங்குநர் நேரடி தொடர்பில்லை ஆனால் மேற்குறிய சேவை நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும். இந்தியாவில் இரண்டு zoneகளுக்கு இரண்டு வழங்குநர்கள் உள்ளனர்{இந்தியா அமெரிக்க கொலாபிரேஷன்}. நவ 25 ஹாரியானவில் தொடங்கப்பட்ட சோதனை முயற்சி வரவேற்ப்பு பெற்றதால் ஜனவரி 20ல் இந்தியா முழுக்க அமலாகிறது. சேவை நிறுவனங்களும் உடனுக்குடன் தங்களை தயாராக்கி வருகிறது. பாகிஸ்தானில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அறிமுகம் ஆகியிருப்பது தொலைத்தொடர்பு துறையில் இந்தியா இன்னும் வளரனும் தம்பி போல

MNPயின் வணிகப் பார்வை?
perfect competitive சந்தையில் இருந்த நிலையான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இங்கு உடைக்கப்படும், வலுவில்லாத நிறுவனங்கள் சந்தையை இழக்கலாம், அந்நிய முதலீடுடன் உள் நுழையும் பெறும் நிறுவனங்கள் பாரம்பரிய நிறுவனங்களை ஆட்டம் காணவைக்கலாம். இந்தியாவின் 2G அலைவரிசையை அதிகமாக கைப்பற்றியுள்ள ஸ்வீடனை மையமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த எண் பெயர்ச்சி முறை சாதகமாக அமையலாம். மேலும் இச்சேவை நான்கு ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அறிமுகமானபோது அதிகமான வாடிக்கையாளர்களை பிடித்த நிறுவனமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்:
http://www.trai.gov.in
http://mnpindia.in/
http://www.syniverse.com

12 comments:

சக்தி கல்வி மையம் said...

தங்களது மேலான பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே...
http://sakthistudycentre.blogspot.com/

ஞாஞளஙலாழன் said...

பதிவுக்கு ரொம்ப நன்றி நண்பரே! தெளிவாக விளக்கி விட்டீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

rompa ரொம்ப சீரியஸா போச்சே பதிவு... ம் ம்

மாணவன் said...

தெளிவாகவும் அனைவருக்கு புரியும்படியும் சொல்லியிருக்கீங்க நண்பரே,

பகிர்வுக்கு நன்றி

நீச்சல்காரன் said...

@sakthistudycentre-கருன்
@ஞாஞளஙலாழன்
@சி.பி.செந்தில்குமார்
@மாணவன்
அதிரடியாக கமெண்ட் மழை பொழிந்ததற்கு நன்றிகள்.
நன்றிகள்.

ஜோதிஜி said...

தேவையான நேரத்தில் அற்புதமான பதிவு

Unknown said...

அனைவருக்கும் பயனுள்ள பதிவு நண்பரே.
நன்றி.

end of lease cleaning Melbourne said...

This has been a very significant blog indeed. I’ve acquired a lot of helpful information from your article. Thank you for sharing such relevant topic with us.

புலிகுட்டி said...

மிகவும் உபயோகமான பதிவுக்கு நன்றி.அலைபேசியின் சேவையை மாற்றுவது போல் டேட்டாகார்டுகளின் சேவையை மாற்றம் செய்ய முடியுமா?சொன்னால் எனக்கு மிக உபயோகமாக இருக்கும்.

நீச்சல்காரன் said...

@புலிகுட்டி
புதிய எண்ணுடன் டேட்டாக் கார்டு வாங்கிப் பயன்படுத்துவதால் சிரமம்மில்லை என நினைக்கிறேன். ஒரே எண்ணுடன் டேட்டா கார்டின் நிறுவதத்தை மாற்றலாமா என தெரியாது ஆனால் டேட்டா கார்டின் எண்ணை சாதாரண எண்ணாக வேறு நிறுவனத்தால் வழங்க முடியாது.

புலிகுட்டி said...

உங்கள் பதிலுக்கு நன்றி.

Unknown said...

மொபைல் இணையம் பத்தி எழுதுங்க பாஸ்