Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Saturday, October 22, 2011

அப்படி போடு போடு போடு... என்கிற பாடல் தமிழ் தெரியாதவர்கள் பலருக்கும் அறிமுகமாயிருக்கும். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் யாரும் இப்பாடலை எழுத்துவடிவில் படிக்கமுடியாது. அதுவே அவர்கள் மொழியில் ಅಪ್ಪಟಿ ಪೋಟು ಪೋಟು ಪೋಟು என்றிருந்தால் எப்படியிருக்கும்? தமிழ் நாட்டிற்கு வேலை நிமிர்த்தமாக வந்து தமிழ் படிக்கத் தெரியாமல் பேசத் தெரிந்தவொரு ஹிந்திக்கார தாய்க்குலத்திற்கு ओरु चेलै वाङ्किनाल् ओरु चेलै इलवचम् என்று இருந்தால் எப்படியிருக்கும்? இதுவெல்லாம் ப்ராட்டிகளாக முடியாதுதான் அட்லீஸ்ட் இணையத்திலாவது இருக்கலாமே!

அதற்கான ஒரு செயலி தான் இது
Tamil Transliteration

இங்கு தமிழ் வாக்கியங்களை வேறு மொழி எழுத்துகளாக மாற்றும். காணப்படும் முதல் பெட்டியில் தமிழ் வாக்கியங்ககளை உள்ளீட்டு செய்து வேண்டிய மொழியினை அழுத்தினால் போதும். அந்தப் பெட்டியில் நேரடியாக தமிழில் தட்டச்சிடவும் வசதியுள்ளது. தற்போதைக்கு ரோமன்[ஆங்கில], தேவநாகரி[இந்தி], மலையாளம், கன்னடம், தெலுகு எழுத்துகள் மட்டும் செயல்படுகிறது. வேறு சில மொழி எழுத்துகளுக்கும் மேம்படுத்தப்படலாம்.

மேற்கூறியவர்கள் யாரேனும் இணையத்தில் வரும் போது இணைய பத்திரிகை மற்றும் உங்கள் பிளாக்கையும் அவர்கள் மொழி எழுத்துக்களால் படிக்கமுடியும். தமிழும் முழுதாகத் தெரியாமல் ஆங்கிலமும் முழுதாகத் தெரியாமல் வளரும் சில மெட்ரிக் பள்ளி மாணவர்களும் இங்கு வந்து தமிழ் கதைகளைப் படிக்கலாம். கடன் கொடுத்த சேட்டு கடைக்காரர்கள் கடனாளியின் தமிழ்ப் பதிவுகளுக்கு "அருமை", "சூப்பர்" என்று பின்னூட்டம் இட்டு வட்டி வாங்கலாம். வேற்று மொழியில் தங்கள் பெயர்களை எழுதி எலக்சனில் நிற்கலாம்.

இறுதியாக தமிழ் படிக்க எழுத்துகள்[script] தடையில்லை என்று கொள்ளலாம்.


சில ஒலிப் பிழைகளை களைவதற்காக தற்போதைக்கு சோதனையோட்டமாக உள்ளது. உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. இரு மொழி வித்தகராக நீங்கள் இருந்தால் அம்மொழியில் இது எப்படி செயல் படுகிறது என்று கருத்து தெரிவிக்கலாம்.

தற்போதைக்கு இது வெறும் எழுத்து பெயர்ப்பாக உள்ளது இதனை முடிந்தளவு ஒலிபெயர்ப்பாக மாற்ற வேண்டும். அதாவது தமிழ் "க" எழுத்தை மற்ற மொழியில் உள்ள முதல் "க" என்ற எழுத்தாகவே எழுத்துப் பெயர்ப்பு செய்கிறது. நமது ககர எழுத்து இடத்திற்கு தகுந்தாற்போல ஒலி மாறுபடும் உதாரணத்திற்கு "கல்வி" யில் உள்ள 'க'வும்[ka] "கர்வம்" த்தில் உள்ள 'க'வும்[ga] வேறுபடுவதை காணலாம். இத்தகைய இடங்களை கண்டு அதற்கேற்ற வேற்று மொழி எழுத்தை பொருத்துவதே ஒலி பெயர்ப்பு.

போற்றி என்பது pooRRi என்று வந்தால் ஒலி மாறுபடும் அதுவே pootri என்று வந்தால் சரியாகயிருக்கும். இங்கே இரண்டு றகரங்கள் வரும் போது t ஒலி உருவாகிறது. இதுபோல அல்லது வேறு மொழி ஒலி வேறுபாடுகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்

ஃ கிற்கு இணையான வேறு எழுத்து உள்ளதா திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளதா?

தமிழில் உள்ளது போல ஙகர வரிசை உயிர்மெய்யெழுத்துகள் சிங்கள எழுத்துகளில் இல்லை அது போல இந்த கன்னட மலையாள தெலுகு வில் இல்லாத தமிழ் ஒலிவடிவங்கள் உள்ளனவா?

பயன்படுத்திவிட்டு நீங்களே ஒரு பெயரும் பரிந்துரைக்கலாம்.

இத்தகைய எழுத்து பெயர்ப்பு வேலை செய்யும் இரண்டு தளங்கள் உள்ளன. ta.girgit.chitthajagat.in, transliterator.blogspot.com முன்னவை ப்ராக்சி சர்வர் மூலம் ஒரு தளத்தை உள்யெடுத்து எழுத்துமாற்றி தரும். அடுத்தவை பல இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு எழுத்து பெயர்க்கும்[நமது கருவி தமிழை வேறு மொழிக்கு எழுத்து பெயர்க்கும்]. அவற்றையும் தேவையானவர்கள் பயன்படுத்தலாம்

விமர்சனமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகிறது

10 comments:

SURYAJEEVA said...

நல்ல தகவல், நன்றி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Karthikeyan Rajendran said...

நல்ல தகவல் நண்பரே!!!!!!!!!!!!தீபாவளி நல்வாழ்த்துக்கள்.................

Unknown said...

நல்ல தகவல் நன்றி!

Unknown said...

மாப்ள இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே..அருமையான தொழில்நுட்பம்..

நேற்றுதான் எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற இடுகையில்

மொழிமாற்றி மென்பொருள் குறித்து எழுதினேன்.இன்று நீங்கள் அதனை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள்

மகிழ்ச்சி..

http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post_24.html

stalin wesley said...

பயங்கரமா செயலி தான் சார் ..


நன்றி

R.Rajarajan.artist said...

மிக உதவியான மென் பொருள் .நன்றி . ஆர் .ராஜராஜன் .

இ.பு.ஞானப்பிரகாசன் said...

அருமையான முயற்சி! இதை வலைப்பூக்களில் இணைத்துக் கொள்ளும் விதமாக, அதாவது, இதை வலைப்பூவில் நிறுவி விட்டால், இதைச் சொடுக்கியவுடன் மொத்த வலைப்பூவும் எழுத்துப்பெயர்ந்துவிட வேண்டும். அப்படி நீங்கள் இதை உருவாக்கிவிட்டால் பலரும் இதைத் தங்கள் வலைப்பூக்களில் இணைத்துக் கொள்ள முன்வருவார்கள். இதன் பயனர் எண்ணிக்கை பெருகும். பல இடங்கள் சரியாகப் பெயரவில்லை என்றீர்கள். ஆங்கிலத்துக்குப் பெயரும்பொழுது சரியாகப் பெயர்ந்தாலே இது வெற்றிதான்.