Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Thursday, January 12, 2012

டொமைன் முகவரி வாங்க வேண்டாம் என்று சொல்லவோ வாங்குங்கள் என்று சொல்லவோ இப்பதிவல்ல. வாங்கும் முன் யோசிக்க வேண்டிய பின் விளைவுகளை மட்டும் பட்டியலிடப்படுகிறது.

களப் பெயர்{Domain Name} என்பது இணைய தளத்தின் இருப்பிடப் பெயர். பெயரிருக்கும் ஒரு இடத்தில் மட்டும் தளத்தை உருவாக்குவது கடிது, உருவாக்கிய எல்லாயிடத்திலும் பெயர் வைப்பது அரிது. அதனால் தான் இரண்டும் வேறு வேறு நிலைகளில் செயல்படுகிறது. இணையதளம் இருக்குமிடத்தை வலைப்பதிவு வழங்கி[blog server] என்றும் முகவரி வாங்குமிடத்தை பெயர் வழங்கி[Name Server] என்றும் சொல்லலாம். பெயருக்கேற்ப பதிவிடுவதை விட, பதிவிற்கேற்ற பெயர் வைப்பது ஒரு சிறந்த உத்தி. ஆகவே பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையில் டொமைன் பெயரென்பது நிலையானதாகவும் அடிக்கடி மாறுவதாகவும் இருக்ககூடாது. ப்ளாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்கள் இலவசமாக வழங்கும் நிலையில் டொமைன் பெயர் வாங்கும்முன் இதற்கு சரியான தேவையுள்ளதா என ஆராய்வது சிறந்தது.

  • டொமைன் என்பது வருடாந்திர ரீதியாக வாடகைக்கு எடுக்கப்படும் எனவே அந்தப் பெயர் நீங்கள் பணம் கட்டும் வரை தான் செயல்படும். மீண்டும் போடப்படும் ஒப்பந்தமும் குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே நீங்கள் அப்பெயருக்கு வாடகைதாரர் மட்டுமே.
  • ஒப்பந்தம் முடியும் போது மீண்டும் பணம் கட்ட தவறினால், வீட்டை ஜப்தி செய்துவிடுவார்கள். அடுத்தவர்களுக்கு அப்பெயர் போக வாய்ப்புள்ளது.
  • ஒரு முறை டொமைன் மாற்றுவதால் பழைய முகவரிகளின் இணைப்பையெல்லாம் இழக்க நேரிடும். இது பிளாக்ஸ்பாட் டூ டொமைன் என்றால் தவிற்கப்படும் அதுவே டொமைனிலிருந்து ப்ளாக்ஸ்பாட் வந்தால் இழப்பு நிச்சயம். இங்கு இணைப்பு எனப்படுவது தேடுதளங்களின் இணைப்பு, அலெக்சா முதலிய தளங்களின் கணிப்பு, மற்றவர் தளங்களில் சுட்டி கொடுத்த கவனிப்பு என எல்லாமும் தவறிவிடும்.
  • டொமைன்(Domain) ஹைஜாக் மற்றும் டி.என்.எஸ்.(DNS) ஹைஜாக் போன்ற வெளிநபர் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை கொண்டதா என்று நீங்கள் வாங்கும் நிறுவனத்தைப் பார்க்கவேண்டும். இதுயில்லாதபோது சிக்கல்தான்.
  • ஆரம்ப காலங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் டொமைன் பெயர் விற்கப்படலாம். வாங்கியப்பிறகு விலைஏற்றம் நிகழாலாம். வேறு அதுவரை சேர்த்த இணைய மதிப்பு இழக்க விரும்பாமல் பணத்தை கட்ட நேரிடலாம்.
  • டொமைன் வழங்கும் நிறுவனம் உங்கள் பெயருக்கு தனியான ip தராத நிலையில்[மலிவு விலை], அதே ஐ.பி.யில் இயங்கும் மற்றொரு தளத்தினால் பாதிப்பு வரலாம். உதாரணம் அந்த தளத்தை தடை செய்ய அதன் ஐ.பி.யைப் பயன்படுத்தினால் அது உங்களையும் பாதிக்கும்.
  • அந்த டொமைன் வழங்கி பிறிதொரு காரணத்திற்கு சோர்வடைந்துவிட்டால், உங்கள் டொமைன் முகவரிக்கு தளத்தை திறக்காமல் லொள்ளு செய்யும்.


கமேர்சியலாகவே, தனித்தன்மையுடன் இருக்க விரும்புகிறவர்களோ, தொடர்ந்து எழுதுபவர்களோ, பல வசதிகள் விரும்புகிறவர்களோ தவிர மற்றவர்கள் மறுமுறை யோசித்து களப்பெயர் வாங்க களமிறங்கவும். இறுதியாக டொமைன் முகவரி லாபாமா நஷ்டமா? என்றால் நீங்கள் எதற்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே


*மேல் கண்ட குறைகள் களப் பெயர் வழங்கும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறலாம்;

பிற்சேர்க்கை:
டொமைன்: ஒரு இணைய தளத்தின் உரலியில்[URL] உள்ள பெயர்கள். உதாரணம் google.com ல் google மற்றும் com என்கிற பெயர்கள். 'com' என்பது உச்ச களப்பெயர்[Top Level Domain] 'google' என்பது இரண்டாம்நிலை களப்பெயர்[second Level Domain]. இலவச தளங்களின் பெயர் அந்நிறுவனப் பெயருடன் சேர்ந்துயிருக்கும் ethirneechal.blogspot.com . நிறுவனப்பெயரை நீக்க மேல்கூறியபடி வாடகைக்கு டொமைன் வாங்கினால் இப்படியிருக்கும் ethirneechal.com அல்லது ethirneechal.net போல இருக்கும். இப்பெயர்களையே ஆங்கிலப்பதத்தில் டொமைன் எனப்படும்

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு தகவல்கள்....

நல்ல யோசனை செய்தே மாறவேண்டும் போல...

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் மாற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். உங்கள் பதிவு யோசிக்க வைக்கிறது! நன்றி நண்பரே! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"

Rathnavel Natarajan said...

பயனுள்ள பதிவு.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

சிரிப்புசிங்காரம் said...

ஒங்களுக்கு இங்கிலீசு தெரியாது...அனா எனக்கு டொமைன் ன்னா என்னான்னே தெரியாதே....

நீச்சல்காரன் said...

[@]c8696087382346286062[/@]முடிந்தளவு விளக்கி பிற்சேர்க்கை சேர்த்துள்ளேன். குறையை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்

மின்துறை செய்திகள் said...

சற்று சிந்திக்கவேண்டிய விசயம்

aladdin said...

நண்பரே, இங்கிலீஷ் வார்த்தைகளை ( computer, internet, bus, train, HTML, Domain ) தமிழில் மொழிபெயர்கதீர் ... இது பிறர் மொழிக்கு கொடுக்கும் மரியாதையை. அவர்களுடய மொழிக்கு அவர்களிட்ட பெயரை மாற்றி ஆங்கிலம் என்பது தவறு... எலி பொறியை நாம் கண்டுபிடித்தோம்.. கணிபோரிகும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை... அவர்கள் உதகமண்டலத்தை ooty என்பதை பொறுக்கமுடியவில்லை, சென்னையை madars ஆனதை சென்னை ஆகிவிட்டோம் ...

aladdin said...

இது தனிழனுக்கு உள்ள 'தடித்தனம்'

நீச்சல்காரன் said...

@allan paul
உங்கள் கருத்துக்கு நன்றி. பிற மொழிக்கு மரியாதை கொடுப்பதால் நமக்கு நஷ்டம் இல்லையே.

SIVAYOGI said...

பயனுள்ள பதிவு நன்றி

இ.பு.ஞானப்பிரகாசன் said...

நண்பரே! நான் திரட்டி ஒன்று தொடங்கலாமா என வெகு நாட்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அது பற்றிய தேடலின்பொழுதுதான் தங்களுடைய இந்தப் பதிவைப் படித்தேன். நன்றி!

எனக்கோர் ஐயம்! இலவசக் களப்பெயர்களை வாங்கலாமா? இணையத்தில் .tk என இலவசக் களப்பெயர் வழங்கி நிறுவனம் ஒன்று இருக்கிறதே, அஃது 14 ஆண்டுகளாகச் செயல்படுவதாக அந்நிறுவனத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ளதே? இதை நம்பி வாங்கலாமா?