Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Saturday, July 28, 2012

பகுதி-I | பகுதி-II | பகுதி-III

இதுவரை உலகத்தைச் சுருக்கிய "பிணையம்" எனப்படும் Networking தொழிற்நுட்பத்தின் அடிப்படையைப் பார்த்தோம். அதன் செயல்பாட்டைத் தற்போது பாப்போம். நமது கதைப்படி வால்பாறை மூனாவது சந்தில் ஒரு உலவல் மையத்தில்[Browsing Centre] இருந்து Hi என்று நண்பர் ஒருவருக்கு அடித்துவிட்டீர்கள். அடுத்த மீநுண் நொடிகளில்(fractional seconds) பின்வருபவைகள் நடக்கும்


i) நீங்கள் தான் வடக்குப்பட்டி ராமசாமியா? உங்கள் மின்னரட்டை கணக்கு சரிதானா? signin செய்துள்ளீரா? என்று சோதனை நடக்கும்
ii) hi என்கிற குறியீடுகளை இரும எண்களாக[Binary] மாற்றிக்கொள்ளும்
iii) உங்கள் உலாவி,அரட்டைப்பெட்டி,நேரம் போன்ற விசயங்களில் அடையாள எண்களை மேற்கொண்ட தரவுகளுடன் குறித்துக் கொள்ளும்
iv) உங்கள் இணைய வேகத்திற்கு ஏற்ப மேற்கண்டவைகளை உடைத்து வரிசையாக எண்களிடும்.
V) களப்பெயர்ச் சேவை வழங்கியிடமிருந்து[Domain Name Service server] கூகிள் சர்வரின் ஐ.பி.முகவரியை வாங்கிக் கொள்ளும்.உங்கள் அனுப்புநராக உங்கள் ஐ.பி.யும் பெறுநராக கூகிள் ஐ.பி.யும் மேற்கொண்ட தரவுகளில் இணைத்துக் கொள்ளும்
vi) கூகிள் சர்வர் உங்கள் பக்கத்து வீடு என்றால் அனுப்பு உபகரணமாக உங்கள் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக கூகிள் மேக் முகவரியையும் இணைத்து விடும். ஆனால் கூகிள் அங்கே இல்லை என்றால் அனுப்பு உபகரணமாக உங்கள் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக அருகேவுள்ள சுவிட்சின் மேக் முகவரியையும் இணைத்து விடும்.
vi)உங்கள் கணினியை இணைத்திருக்கும் இணைய வயரின் மூலம் மேற்கொண்ட தகவல்கள் மின் துடிப்புகளாக அந்த சுவிட்சை நோக்கிப் பாயத் தொடங்கும்

இதுவரை நடந்தவைகள் எல்லாம் உங்கள் கணினியிலேயே நடக்கும். இனி அப்படியே கேமிராவை திருப்புகிறோம், அந்த சுவிட்ச் நோக்கிப் போவோம்.
அந்த தரவுகளை வாங்கிய சுவிட்ச் தலைகீழாக ஒன்றொன்றாகப் பிரித்துப் படிக்கும். பெறுநர் முகவரியான கூகிள் பக்கத்து தெரு என்றால் மேலே சொல்லப்பட்ட v) வரை கொண்ட தகவலுடன் அனுப்பு உபகரணமாக அந்த சுவிட்சின் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக கூகிள் மேக் முகவரியையும் இணைத்து விடும்.
இல்லாவிட்டால் மேலே சொல்லப்பட்ட v) வரை கொண்ட தகவலுடன் அனுப்பு உபகரணமாக அந்த சுவிட்சின் மேக் முகவரியும், பெறும் உபகரணமாக அருகேவுள்ள ரவுட்டர் மேக் முகவரியையும் இணைத்து விடும்.
மீண்டும் செம்புக்கயிறு அல்லது ஒளிவடம் மூலமாக மின் துடிப்புகள் பாயும்

ரவுட்டரை அடைந்தவுடன், ரவுட்டர் பிரித்துப் படித்து, கூகிள் ஐ.பி. குடும்பம் எந்த வழியில் உள்ளது என தனது ஞாபகத்தில் தேடியும், பக்கத்து ரவுட்டரைக் கேட்டும் கண்டுபிடிக்கும். கடைசியில் சிறந்த வழிப்பாதையில் உள்ள உபகரணத்தில்(சுவிட்ச்/ரவுட்டர்) மேக்முகவரியைப் பெறுநராகப் போட்டு அதனிடம் அனுப்பும். அந்த உபகரணமும் இதேபோல பக்கத்து உபகரணத்திடம் அதே வழிப்பாதையில் அனுப்பும். இப்படியே போய்ச்சேர்ந்த இந்த hi இறுதியாக கூகிள் சர்வரின் அருகே உள்ள ரவுட்டரை அடையும். {இந்த வழியில் எந்தனை ரவுட்டர்கள் உள்ளன என நீங்கள் அறிய பகுதி-I கூறியது போல tracert என்கின்ற கட்டளையைப் பயன்படுத்தலாம்.}

அந்த ரவுட்டர், அருகே உள்ள சுவுட்சுக்கு அனுப்பும், இறுதியாக கூகிளை அடையும். இது மின்னரட்டை[chat] என்பதால் கூகிள் உடனே இந்த தகவலை உங்கள் நண்பருக்கு அனுப்பும். நண்பரின் வால் ஸ்ட்ரீட் ஐ.பி. முகவரியைத் தனது signin செய்த கணக்கின் உதவிடம் பெற்று சுவிட்சு,ரவுட்டர் என வாழைப் பழத் தோலை உரித்து ஊட்டுவது போல கடந்து வால் ஸ்ட்ரீட்டை அடையச் செய்யும். முதலில் சொன்ன ஏழு செயல்களைத் தலைகீழாக அவர்கணினி செய்து முடிவில் இரும எண்களைக் கணினிக் குறியீடுகளாக மாற்றி அவரது திரையில் Hi என்று பளிச்சிட வைத்து, யுகப்புரட்சின் ஆராவாரம் ஏதுமின்றி அடுத்த Hi க்காகக் காத்திருக்கும். chatbox போல மின்னஞ்சல், இணையபக்கம், இந்தக் கட்டுரையை படிக்கும் உலாவி என எல்லா இணைய மென் செயலிகளும் மேற்கண்ட விதத்திலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்த்துகின்றன.

உலகின் எல்லா நாடுகளும் கடல் வழியாக ஒளிவடம்[optical cable] போட்டு இணைத்திருக்கின்றன[தரைவழியும் உண்டு]. சென்னைலிருந்து மூன்று சர்வதேச ஒளிவடங்கள் கிழக்கிலும் மேற்கிலும், மும்பையிலிருந்து எட்டு ஒளிவடங்கள் வெளிநாட்டிற்கும், கொச்சி/தூத்துக்குடியிலிருந்து தலா ஒரு வடம் மாலத்தீவு/இலங்கைக்கும் செல்கின்றன இவைதான் பிரதான தகவல் வழிச் சாலைகள் ஆகும். ஒன்று இயற்கைச் சீற்றத்தால் செயலிழந்தாலும் மற்ற தடங்கள் மூலம் தகவல் தடையின்று பரிமாறப்படும். நாட்டின் இணையக் கட்டுபாடுகள் இங்குதான் விதிக்கமுடியும். அனுப்புநர் ஐ.பி. யை தடை செய்வதன் மூலம் சீன போன்ற நாடுகளில் பிற நாட்டு சில தளங்கள் இப்படியே தடை செய்யப்படுகிறது. இதுபோல உள்நாட்டிலும் முக்கிய நகரங்களில் ஒளிவடங்கள் மூலம் தரைவழி இணைப்பும் உள்ளது. ஒளிவடம் என்பது அதிகமான தரவுகளை[Data] கொண்டு செல்லும் அதனாலே அதிக போக்குவரத்து கொண்ட தொடர்புகள் ஒளிவடங்களாகவே இருக்கின்றன. கடல்வழி சார்வதேச ஒளிவடங்களின் வரைபடம் காண இங்கு செல்லலாம் www.submarinecablemap.com இந்த மொத்தப் பிணையத்தின் தரவு பரிமாற்றம் எல்லாம் தரை/கடல் வழியே நடக்கிறது. அரிதான அல்லது முக்கியமான பரிவர்தனையே செயற்கைக்கோள் உதவியை நாடுகிறது.

க்ளைமேக்ஸ்:
அடுத்து அந்த நபர் பதிலுக்கு hi என்று அடித்தால் மேற்கொண்டவைகள் எல்லாம் கடந்து வால் ஸ்ட்ரீட்டிலிருந்து வால்பாறை வந்து நமது திரையில் சில நொடிகளில் வருவதற்குள் மின்சாரவரியத்திற்குத் தகவல் போய் மின்வெட்டு

சுபம்

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விளக்கம்.
எழுத்து நடை அருமை.
பகிர்வுக்கு நன்றி.

கவி அழகன் said...

Ha ha nalla thelivana urainadai

MARI The Great said...

நல்ல விளக்கம் நண்பா!

Unknown said...

வால் ஸ்ட்ரீட்டிலிருந்து வால்பாறை வந்துநமது திரையில் சில நொடிகளில் வருவதற்குள் மின்சாரவரியத்திற்குத் தகவல் போய் மின்வெட்டு...நல்ல ஷொட்டு (வெகு அருமை நன்றி)

தமிழார்வன் said...

வலையமைப்புகளைப் பற்றி நல்லதொரு விளக்கங்கள்... மேலும் இது போன்ற பதிவுகளை தமிழில் படைக்கவும். Windows Server பற்றி முடிந்தால் எழுதவும். வாழ்த்துக்கள்.


தமிழார்வன்

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவுநன்றி,http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

tamil10 said...

நீங்கள் விரும்பினால் இந்தத் தொடரை தமிழ்10 நூலகத்தில் (http://tamil10.com/library/) இணைக்கலாம் உங்கள் பெயர் மற்றும் வலைப்பூ முகவரியுடன் இணைக்கலாம் . மேலதிக விபரங்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளவும் (http://www.tamil10.com/static/contact-us/)

Gajen Dissanayake said...

"வைய விரி வலை" (World Wide Web) பற்றிய அடிப்படை விளக்கங்கள் அருமை...! தொடருங்கள்...!

muthupandi said...

மிக்க நன்றி

muthupandi said...

அருமையான பதிவு மிக்க நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான பதிவு.....வாழ்த்துகள்....நன்றி,மலர்http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Laura said...

நல்ல விளக்கம் நண்பா!

Anonymous said...

அருமையான பதிவு.பதிவிற்கு நன்றி...உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்.