Mobile version | RSS Feed |
புதியவை
Loading...Sunday, July 28, 2013

Info Post
ர்க்கீமிடீஸ் மிதவை விதியைக் கண்டுபிடித்தார் என்று மனப்பாடம் செய்யும் ஒரு பள்ளி மாணவர், அந்த மிதவை விதியைப் பயன்படுத்தி சோதிக்க முனைந்ததில்லை அல்லது முனையவிட்டதில்லை. காக்கா கல்லைப் போட்டு தண்ணியைக் குடித்தது என்று அந்தக் காலத்தில் பாட்டி கதைகளின் ஊடாக ஒளிந்திருந்த அறிவியல் விதிகள் பாட்டியோடு ஒழிந்துவிட்டது. மார்க் விழாதவரை எத்தனை ஆப்பிள்கள் விழுந்தாலும் நமூரில் நியூட்டன்கள் உருவாவதில்லை என்ற கூற்றும் உண்மையே! நடைமுறை உதாரணங்கள் இன்றியும், செயல்முறை ஒத்திகைகள் இன்றியும் பெரும்பாலும் நமது கல்விமுறை முனைமழுங்கப்பட்டுவருகிறது. தற்போது செயல்முறைச் சோதனைகள் சிலவற்றை இணையத்தில் செயல்படுத்திப் பார்க்கும் சிமுலேஷன் எனப்படும் பாவனைகள் வந்துள்ளன. இங்கு பலவிதச் சோதனைகள் உள்ளன, நாமே நகர்த்தியும் எரிந்தும், கலக்கியும் விளையாடலாம். தமிழிலும் உள்ளன, விரும்புகிறவர்கள் மொழிமாற்றம் செய்து கொள்ளவும் வசதிவழங்கப்படுகிறது.
விஞ்ஞானம் படிக்க அற்புத பாவனைகள்(Simulations)


போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்களும், போட்டி போட்டு இணையத்தளங்களைப் படிப்பவர்களும் சில நேரங்களில் சில இணையத்தளங்களை அப்படியே முழுதாக சேமிக்கமுடியாத என்று யோசிப்பதுண்டு. மேலும் வலைப்பதிவுகள், தகவல்களஞ்சியங்கள், இணைய நூலகங்கள் என பல தளங்களை அப்படியே தரவிறக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவி வேண்டிய இணைய முகவரியைக் கொடுத்துவிட்டால் அது தானாக அத்தளத்தின் எல்லாப் பக்கங்களையும் துழாவி உங்கள் கணினியில் சேமித்துவிடும். மேலும் தவிர்க்க வேண்டிய பக்கங்கள், சேமிக்க வேண்டிய இடம் என நாமே தேர்வு செய்து தரவிறக்கும் வசதி கொண்டது. இணையத்தளத் தரவிறக்கி
http://www.httrack.com/page/2/en/index.html

ணையம், எல்லையில்லாமல் எழுத்துலகிற்குக் காகிதங்களைத் தந்துள்ளது. அதில் தொழிற்முறை எழுத்தாளரரும், பகுதிநேர எழுத்தாளரும், கேளிக்கை எழுத்தாளரும் வெட்டி எழுத்தாளரும் பக்கங்களை மொழியால் நிரப்பிவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இலக்கு. ஆனால் ஒரு புள்ளியில் எழுத்தாளர் என்றக் கொள்கையின்பால் பலருக்கு தனது எழுத்துக்களை நூல்களாக்கவும் ஆவல் இருக்கிறது. இணையத்தில் iBooks, Kindle, ePub, Google Play Books என பலவித கருவிகளில் படிப்பதற்கு ஏதுவான மின்னூல்களும் தற்காலத்தில் பெருகி வருகின்றன. தனது எழுத்துக்கள் ஒரு இணையம் சார்ந்த மின்நூலாக இலவசமாக பலருக்கு சென்றடைய விரும்புகிறவர்களுக்கு இலவசமாகப் பல வடிவங்களில் படிக்க ஏதுவான மின்னூல்கள் வெளியிட புதிய தமிழ் இணையம் அறிமுகமாகியிள்ளது. உங்கள் எழுத்துக்களை உங்கள் பெயருடன் யாரும் யாருக்கும் இலவசமாக வழங்கலாம் என நினைத்தால் உடனே தொடர்பு கொள்க
http://freetamilebooks.com

புளியோதரை கட்டிக்கொண்டு இரயில் முன்பதிவுக்கு இரயில் நிலையத்தில் வரிசை போட்ட காலம் மாறி, irctc சார்வரைத் திட்டிக் கொண்டு இணையத்தளத்தில் இரயில் முன்பதிவு செய்த காலமும் மாறி, கைப்பேசி பித்தானைச் சுட்டிக் கொண்டு இனி முன்பதிவு செய்யும் நிலை வந்துவிட்டது. அண்மையில் இந்திய இரயில்வே அறிமுகம் செய்துள்ள குறுந்தகவல் வழி முன்பதிவு வசதியால் இருந்த இடத்திலிருந்தே முன்பதிவு செய்யலாம். ஏர்டெல் மணி, பிரிப்பெய்ட் பி.எஸ்.என்.எல். அட்டை, m-wallet அல்லது புதிதாக வங்கிகளில் பதிவு செய்து Mobile Money Identifier என்ற குறிச்சொல்லைப் பெற்றாலோ எளிதில் முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். குறைந்தது இரண்டு முறை குறுந்தகவல் அனுப்பவேண்டியுள்ளதால் சுமார் 6 INR மற்றும் இதர சேவை வரிகளும் உள்ளன என்பது புதிய நுட்பத்திற்கு வழங்க வேண்டிய விலையாகும். மேலும் விபரங்கள் அறிய
  irctc

ணையத்தில் இணையவழி மொழி மாற்றிகள் என்றால் இரண்டு, ஓன்று கூகிளுடையது, மற்றொன்று மைக்ரோசாப்ட்டுடையது. இவ்விரு ஜாம்பவான்களை விட பெரிய மொழி மாற்றிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் சிறந்ததாக மைக்ரோசாப்ட் மொழிமாற்றியே எனது பார்வையில் உள்ளது. கூகிளில் உள்ள தமிழ் மொழி மைக்ரோசாப்ட்டில் இல்லைதான் இருந்தாலும் பிற மொழிகளில் கூகிளை விட சிறப்பாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இந்திய மொழியில் இந்தி இதில் இடம் பிடித்திருப்பதால் விரைவில் ஒத்த வாக்கிய அமைப்புடைய தமிழும் பிற திராவிட மொழிகளும் மைக்ரோசாப்ட் மொழி மாற்றியில் வரக்கூடும். இரண்டையும் சோதித்து உங்கள் தெரிவுகளையும் தெரிவிக்கலாம்.

ணினி நிரலாக்கத்துறையில்[computer Programming] வழங்கிசார் உரை மற்றும் வாங்கிசார் உரை என இருவகை உரைகள்[Clientside & Serverside Script] உள்ளன. இதில் வழங்கிசார் உரை என்பது சர்வர் எனப்படும் வழங்கிகளில் இயங்கக்கூடியது. உதாரணத்திற்கு கூகிள் தேடல், ரயில் பதிவுத்தளம் போன்ற வழங்கிகளின் துணையுடன் செயல்படக்கூடி asp, jsp, python போன்றவை. வாங்கிசார் உரை என்பது வாங்கிகளில் செயல்படுபவை. உங்கள் கணினி, கைப்பேசி என வழங்கிகளிடம் இருந்து வாங்கிக்காட்டும் உபகரணம் யாவும் வாங்கி என விளிக்கப்படுகிறது. இவ்வுரைகளுக்கு உதாரணம் அகிஹபரா, இனியன் எழுத்துப்பெயர்ப்பி போன்ற, தளத்தில் உயிரூட்டும் javascript, VBscript போன்றவைகள். வாங்கிசார் உரைகள் இயக்க சாரண உலாவிகளே[Browsers] போதுமானது, இணைய இணைப்பும் தொடர்ந்து தேவைப்படாது. வாங்கி உரைப் பக்கங்களை ஒரு முறைத் திறந்தாலே அதனை இணைய இணைப்பின்றி செயல்படுத்தலாம். ஆனால் வழங்கி உரைப்பக்கங்கள் இயங்க இணைய இணைப்பு தொடர்ந்திருக்க வேண்டும். காரணத்தைச் சொல்லவேண்டுமென்றால் வாங்கி உரைகள் வாங்கி உபகரணங்களில் மட்டும் தனது பரிவர்த்தனையை அமைக்கும், ஆனால் வழங்கி உரைகள் வாங்கி-வழங்கி என பரிவர்தனைகளைப் பரிமாறிக்கொள்ளும். வாங்கி உரையில் இயங்கி வந்த தமிழ்ப்புள்ளியில் மட்டும் இதுவரை வெளிவந்து கொண்டிருந்த நமது புதிய செயலிகள் இனி வாங்கி உரைகளில் இயங்கக்கூடிய ஆப்ஸ்புள்ளி தளத்திலும் தொடரும்...

4 comments:

வரதராஜலு .பூ said...

எக்சல்லன்ட் & சூப்பர் டிப்ஸ். பகிர்வுக்கு நன்றி

வரதராஜலு .பூ said...

I'm expecting more & more posts in this regard. please continue your service

SNR.தேவதாஸ் said...

அற்புதமான பலசுவைத் தகவல்கள்.பயனுள்ளவை.
தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Thomas Ruban said...

அனைத்துமே மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி.தொடரட்டம் உங்கள் சேவை.