Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, August 1, 2013

தமிழ் நவீன இலக்கியங்களில் ஒரு வடிவமாக விரைவில் கருதப்படும் ஒரு வடிவம் 'டிவிட்' எனப்படும் கீச்சு. 144 யுனிக்கோட்(சுமார் 100 தமிழெழுத்துக்கள்)க்குள் இருக்கவேண்டும் என்பதைத்தவிர வேறு வரைமுறையில்லாத ஒருவித வடிவம். ஈரடி வெண்பாக்கள் எல்லாம் இதன் முன்னோடிகள் என்று சொல்லலாம். டிவிட்டர் எனப்படும் ஒரு இடைமுகம் வழியாக எழுதப்படும் இவ்வகை குறுஞ்செய்திகள் அவ்வப்போது வெறும் உரையாடலாக இருந்தாலும், பலநேரம் ஒரு பெருஞ்செய்தியின் ரத்தினச் சுருக்கமாக ஒரு பண்பைக் கொண்டுள்ளன. பகடியோ, நையாண்டியோ, எள்ளலோ துள்ளலாகவுமிருக்கும், அழுகையோ, ஆதங்கமா, அரவணைப்போ அழுத்தமாகவுமிருக்கும். இதற்கு சிறப்பான ஒரு ஒத்திகையோ, ஒப்பீடோ தேவையில்லை, மனதில் பட்டதை வரிகளில் கொட்டிவிட வேண்டியதுதான், நீங்களே படைப்பாளி, உலகமே வாசகன். இதன் ரசனை பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களையும் ஈர்த்துள்ளதற்குச் சான்று பல்வேறு ஊடகங்களில் வரும் கீச்சுகளின் தொகுப்பாகும். இந்நிலையில் தமிழ் டிவிட்டுலகில் வெளிவரும் பிரபலமான கீச்சுகளை மட்டும் தொகுத்துத் தரும் ஒரு புதுத் திரட்டி அறிமுகமாகியுள்ளது.


RT_tamil

சிறந்த கீச்சுகளைப் படிப்பதற்கும், பதிப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த இணக்கத்தை வாசகரிடமும், படைப்பாளியிடமும் உருவாக்குவது இதன் நோக்கம். இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய அம்சம் யாதெனில், கீச்சுகள் நடப்புச் செய்திகளின் பிரதிவாதமாகும்; தனிமனிதக் குமுறல்களின் வடிகாலாகும்; சமூக மாற்றத்தின் விவாதப்புள்ளியாகும்; இதனை டிவிட்டரில் பயனர் கணகில்லாதவர்கள் படிப்பதென்பது எளிதனதல்லை. வலைப்பதிவுகளுக்கென தொகுத்துத் தரும் திரட்டிகள் போல டிவிட்டுகளைத் திரட்டித் தர திரட்டிகள் இருந்ததில்லை. எல்லாக் கீச்சுகளைத் தொகுப்பதும் படிப்பதும் அயர்ச்சியான ஒருவிசயமே. ஒரு நிமிடத்திற்கு சுமார் நூறு கீச்சுகள் வெளிவரும் போது அதனை எல்லாம் படிப்பதும் சாத்தியமற்றது. இவற்றிற்கு ஒரு விடையாக இத்திரட்டி அமையும். அந்தந்த நேரத்திற்குப் பிரபலமான அதாவது அதிகம் ரீடிவிட் எனப்படும் மறுகீச்சுகள் பெற்ற கீச்சுகளை எல்லாம் தொகுக்கிறது.

டிவிட்டர் மற்றும் கூகுளின் தொழிற்நுட்ப உதவியுடன் தானியங்கியாகத் திரட்டுவதால் இத்திரட்டி, அந்நுட்ப உதவி தொடரும் வரை திரட்டிக் கொண்டேயிருக்கும். அந்தத் தானியங்கித் தொகுப்பின் டிவிட் முகவரி https://twitter.com/rt_tamil ஆகும். நீங்கள் டிவிட்டர் பயனர் கணக்கைத் தொடங்கிப் பின்தொடரலாம், அல்லதும் நேரடியாக தளத்திற்கு வந்தும் படிக்கலாம்.

யாருக்கான திரட்டி?
பொதுவாக திரட்டி என்பது எழுதுபவருக்கும், படிப்பவருக்கும் பாலமாக இருப்பது. அதுபோல இத்திரட்டி, டிவிட்டிய கீச்சருக்கும் படிக்கும் வாசகருக்கும் இடைமுகமாக இருக்கும். எழுதுபவர்களைவிட, டிவிட்டில் கணக்கு கொண்டவர்களைவிட புதிய வாசகர்களே இதன் இலக்காகும். டிவிட்டரில் பயனர் அனைவரையும் பின்தொடர்ந்து கீச்சுகளைப் படிக்கமுடியாதவர்களும், முத்தாய்ப்பாய் அன்றைய அல்லது அப்போதைய பிரபல கீச்சுகளை மட்டும் படிக்கவிரும்புகிறவர்களுக்கும் இத்திரட்டி சமர்ப்பணம்.

எப்படி படிப்பது?
நேரடியாக http://twitter.com/RT_tamil என்ற முகவரிக்குச் சென்று டிவிட்டர் கணக்கே இல்லாமலும் படிக்கலாம். அல்லது உங்கள் டிவிட் கணக்கில் இருந்து பின்தொடர்ந்து படிக்கலாம். அல்லது கீழ்கண்ட நிரல்களை உங்கள் இணையத்தளத்தில் இணைத்துப் படிக்கலாம்.

<a class="twitter-timeline" href="https://twitter.com/RT_tamil" data-widget-id="362866475784089600">Tweets by @RT_tamil</a> <script>!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?'http':'https';if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+"://platform.twitter.com/widgets.js";fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,"script","twitter-wjs");</script>

எதையெல்லாம் திரட்டும்?
டிவிட்டரில் அதிக மறுகீச்சுகள் பெற்ற தமிழ்க் கீச்சுகளை மட்டும் திரட்டும். மேலும் சில காரணிகள் கொண்டு பிரபலக் கீச்சுகள் தீர்மானிக்கப்பட்டு அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவை தானியக்கமாகவும், இணைத்துக் கொள்பவர்களின் டிவிட்டுகளையும் தேடி, பிரபலமானவற்றை மட்டும் மறுகீச்சிடும். அதனால் தமிழ் யுனிக்கோடுடன் கீச்சப்படும் அனைத்து கீச்சுகளும் தகுதியானவையே. ஆனால் எல்லையில்லாத டிவிட்களை அலசும் போது சில கீச்சுகள் விடுபட வாய்ப்புள்ளது.அதனால் இத்திரட்டியில் இணைத்துக் கொள்பவர்களின் பிரபலக் கீச்சுகள் விடுபட வாய்ப்புக் குறைவு.

எப்படி இணைப்பது?
உங்கள் கீச்சு கணக்கை இணைக்க RT_tamil என்ற கணக்கைப் பின்தொடரலாம், சில நிமிடங்களில் உங்கள் கணக்கு தானியக்கதில் சேர்த்துக் கொள்ளப்படும். அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யலாம் சில நாட்களில் உங்கள் கணக்கு தானியக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.

தற்போதைய கீச்சுகள்


மேலும் தானியங்கி பற்றிய விபரக்குறிப்புகள்

டிவிட் ஜோசியம் என்ற டிவிட் சார்ந்த ஒரு செயலியும் அறிமுகம் ஆகிறது. இதில் உங்கள் கீச்சுக் கணக்குப் பெயரைப் போட்டுத் தட்டினால் உங்கள் கடைசி 200 கீச்சுகளின் அதிகம் பிரபலமனவையும், அதிகம் விருப்பமானவையும் பட்டியலிடுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்
http://apps.neechalkaran.com/twitter

பொறுப்புத் துறப்பு:
RT_tamil என்ற கணக்கில் வெளிவரும் மறுகீச்சுகள் அனைத்தும் அந்தந்தக் கீச்சாளருக்கே சொந்தம்; RT_tamil போட நினைப்பது வாசகருக்கும் கீச்சாளருக்கும் பந்தம்.
ஒபாமாவிற்கு நன்றிகள்

2 comments:

Unknown said...

அருமை ,எளிமை ,

தமிலு வலய்ப்பதிவு said...

கீச்சு மட்ரும் மருகீச்சு யாவுமே மிகமிக னன்ரு. வெட்ரி. https://twitter.com/ulikininpin