கூலித் தொழிலாளியின் மகன் நீரில் இயங்கும் புது வகை சைக்களைக் கண்டுபிடித்தார், 2G தொழிற்நுட்பத்தில் புதுவகை வாகனப் பூட்டு கண்டுபிடித்தார், தார் சாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறைக் கண்டுபிடித்தார் என்று மாணவர்கள் பற்றிச் செய்திகள் வருவதுண்டு. ஆனால் அவர்கள் மீது உலகத்தின் வெளிச்சம் பட்டதா? டியுப் லைட் வெளிச்சம் மட்டும் பட்டிருக்கலாம். அதற்கு ஒரு ஒளியாக, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் இணையப்போட்டியை கூகிள் முதன் முதலாக ஜனவரி 10 தொடங்கியுள்ளது. 13-18 வயது உடைய மாணவர்கள் பங்கு கொள்ளும் அறிவியல் வரைவுகளுக்கான[project] போட்டியது. நிபந்தனைகள் என்று பெரிதாக இல்லை ஆனால் குறிப்பிட்ட நெறிமுறையில் சமர்பிக்க வேண்டும் ஏப்ரல் 4 வரை சமர்பிக்கலாம். அதற்காக பிரேத்தேக இணைய தளத்தையும் வழங்குகிறது கூகிள். வெற்றிப் பெற்றவர்களுக்கு உலகத்தின் பார்வை கட்டாயம் கிடைக்கும் அதுபோக பரிசாக ..... சரி சரி வடை நமக்கில்லை மாணவர்கள் அங்கு போய் பார்த்துப் பங்கெடுக்கவும். பள்ளிகளிலும் சொல்லிப் பங்கெடுக்க செய்யலாம். அது சம்மந்தமான கண்ணொளி
உங்கள் வலைப்பூவில் பகிரும் படங்களை மொத்தமாக ஒரே இடத்தில் படம் போட்டுக் காட்ட விரும்பினால், அதற்கு பிகாஸா நமக்கு உதவும். ப்ளாக்கர் தளத்தில் பதிவும் ஒவ்வொரு படமும் பிகாசாவில் நேரடியாக இணைந்துவிடும் உங்கள் பிகாசா கணக்கில் சென்றுப் பார்த்தால் ஒவ்வொரு ஆல்பமாக இருக்கும். மேலும் புதிய வேண்டிய படங்களையும் நேரடியாக பிகாசாவில் இணைக்கமுடியும். இங்கு செல்லவும். நீங்கள் இதுவரை வலை ஏற்றியுள்ள அத்தனைப் படங்களும் அந்தந்த அல்பமாக இருக்கும், வேண்டிய ஆல்பம், படத்தில் நீள அகலம் கொடுத்து கீழுள்ள கோடுகளை எடுத்துப் பகிர்ந்துக் கொள்ளலாம். புகைப் படங்களை அதிகம் உள்ள நேரத்தில் இப்படி தனியான அல்பத்தில் ஏற்றி பதிவிடுவதால் பக்கம் திறக்கும் கால விரையத்தை குறைக்கலாம்.
ஒரு வேர்ட் டாக்குமண்டை மற்றொரு ஒப்பன் டாக்குமண்டாகவோ பிடிஎஃப் ஆகவோ மற்ற அல்லது அதுபோல வேறு கோப்பின் வகைகளை மாற்ற எந்த மென்பொருளின் உதவியும் இன்றி இணைய வழியில் மாற்றித் தரும் வச்திடை ஜூஹோ தளம் நமக்குத் தருகிறது.கணக்குத் தொடங்க வேண்டும் என்று கட்டாயமில்லை யாதொருவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதியாக உள்ளது.
டிவிட்டர் பிரியர்கள் தாங்கள் தொடரும் பயனர்களை ஒரேப் பக்கத்தில் காட்ட http://twit100.com/ செல்லலாம். இதில் அதிகபட்சம் 100 டிவிட்டர்களின் கடைசி டிவிட்டுகளைப் பார்க்கலாம். அதுபோல பேஸ்புக் பயனர்களும் பயன்படுத்து வகையில் http://www.postpost.com/ உள்ளது இதில் பதிவு செய்தப்பின் உங்கள் நண்பர்களின் செய்திகள் மூலைக்கு ஒன்றாக செய்தித்தாள் வடிவில் ஒரே பக்கத்தில் வந்து விடும்..
மென்பொருளுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் கணியன் பூங்குன்றனார் விருதை 2009 ஆண்டு சார்பாக NHM writer பெற்றுள்ளது. அதன் வெற்றிக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.
சென்ற ரீடர் பதிவின் நீட்சியாக ரீடரில் இணைக்கும் வகையான தமிழ்த் திரட்டிகளின் ஓட்டுச் சுட்டி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரீடரில் இருந்து நேரடியாக திரட்டிக்கு செல்லும் வகையில் உள்ள இந்த சுட்டி சோதனைக்காக இன்று முதல் இந்த தளத்தில் செயல்படுகிறது. பிடித்திருந்தால் ரீடரின் வழியிலும் வாக்களித்து கருத்துச் சொல்லலாம். இந்த நிரலிகள் வெற்றிப்பெற்றால் ஓட்டுச்சுட்டி அடுத்தப் பதிவில் வெளியிடப்படும்
டாட் டிப்ஸ் (மார்கழி 30)
Info Post
9 comments:
வழக்கம்போலவே பயனுள்ள தகவல்கள் நண்பரே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி
// டிவிட்டர் பிரியர்கள் தாங்கள் தொடரும் பயனர்களை ஒரேப் பக்கத்தில் காட்ட http://twit100.com/ செல்லலாம். இதில் அதிகபட்சம் 100 டிவிட்டர்களின் கடைசி டிவிட்டுகளைப் பார்க்கலாம். //
இந்த செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது... நன்றி...
பயனுள்ள தகவல்கள் நன்றி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
டக்ரான டிப்ஸ் நண்பரே
வணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc
(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)
@மாணவன்,
@Madurai pandi,
@Philosophy Prabhakaran,
@Dr.எம்.கே.முருகானந்தன்,
@Lucky Limat லக்கி லிமட்
நன்றி நன்றி
@ரிஷபன்Meena,
நன்றி நல்வாழ்த்துகள்
Post a Comment