Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, March 19, 2018

Info Post
கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சில நுட்பச் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அதற்கு உதவும் வகையில் ஆட்சென்ஸ் இணைப்பது தொடர்பான நுட்ப வழிமுறைகள் கீழே உள்ளன. ஆட்சென்ஸ் தொடர்பாக கூகிள் நடத்திய நிகழ்வு பற்றி அறிய இங்கே செல்லலாம்.


ஆட்சென்ஸ் தளத்தில் முதலில் தளத்தைப் பதிவு செய்து கணக்கிற்கு அனுமதி வாங்கவேண்டும். ஒருவர் ஒரு கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும் (என்பது விதி) அதில் எத்தனைத் தளங்களையும் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் ஆட்சென்ஸ் வழங்கும் நிரலை உரியவகையில் தளத்தில் இட்டுப் பயன்படுத்த வேண்டும் அவ்வளவே.

விண்ணப்பித்தல்
பொதுவாக http://google.com/adsense என்ற தளத்திற்குச் சென்று signin/signup செய்து கொண்டு(gmail கணக்குத்தான் வேண்டுமென்பதில்லை), நமது தளத்தின் முகவரியைக் கொடுத்து அனுமதி (approval) வாங்க வேண்டும். ஆனால் பொரும்பாலும் பிளாக்கர் தளங்கள் என்றால் நேரடியாக Dashboard->Earnings->signup என்று செல்லலாம்.

அதிகப் பார்வையாளர்கள் கொண்ட தளமாகவும், குறைந்தது ஆறுமாத வயதுடைய தளமாகவும், சட்டத் திட்டங்களுக்குட்பட்ட தளமாகவும் இருந்து நீங்கள் 18 வயது பூர்த்தியானவர் என்றால் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய இங்கே பார்க்கவும். யாரெல்லாம் தகுதியுடையோர் என்று சரிபார்த்துக் கொள்ளலாம். பிளாக்கரில் உங்கள் தளம் தகுதியானது இல்லை என்றால் கீழ்க்கண்டவாறு காட்டும். அத்தகையோர் சிறப்பாக எழுதிக் கொண்டு எதிர்காலத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோரிக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுமார் 3 நாளில் கணக்கை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்வார்கள். ஏற்கப்பட்டுவிட்டால் சுமார் பத்து டாலர் அளவேனும் வருவாய் ஈட்டிய பிறகு வீட்டு முகவரி சரிபார்த்தல்(Address Verification) நடக்கும். அதன் பிறகு வங்கி தொடர்பான தகவல்கள் வாங்கப்பட்டு 100 டாலர் என்ற அளவைக் கடந்த பின்னரே ஒவ்வொரு மாதமும் அத்தொகை வழங்கப்படும்.

இணைத்தல்

பிளாக்கரில் இணைப்பதென்பது எளிது. show ads on blog என்பதை yes கொடுத்து எவ்வகையில் காட்சிப் படுத்த வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். பின்னர் சேமித்தாலே போதுமானது. கூடுதலாக செய்ய விரும்பினால் Dashboard->Layout-> Add aGadget -> Adsense என்று விரும்பிய வடிவத்தில் விளம்பரங்களை அமைத்துக் கொள்ளலாம். பதிவினுள்ளே காட்ட விரும்பினால் dashboard-> layout-> Blog Posts gadget எடிட் செய்து Show Ads Between Posts என்பதைத் தேர்வு செய்யலாம்.

வேர்ட்பிரஸ் போன்ற தளங்களுக்கு தனியே உட்சொருகிகள் உள்ளன இந்த வழிகாட்டலைப் பின்பற்றலாம். ஏனையோர் google.com/adsense தளத்தில் நுழைந்து My ads -> Ad units என்ற பகுதியில் New ad unit என்று உருவாக்கி வேண்டிய வடிவத்தை அமைத்துக் கொள்க. பின்னர் get code மூலம் நிரலைப் பெற்று அதனைத் தளத்தில் இடவேண்டும். பிளாக்கர் தளமென்றால் இந்த வழிமுறை தானாக நிகழும், இதர தளங்களில் இணைக்க இதனைச் செய்யவேண்டும்.


எந்த யூனிட் எப்படி உருக்கினால் சிறப்பாக இருக்கும் என்று குழப்பமிருந்தால், My ads -> content -> Auto ads என்ற வகையைத் தேர்வு செய்து அதில் காட்டப்படும் நிரலை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம். auto ads பயன்படுத்துவதால் கூகிளே விளம்பரங்களின் அளவையும், இடத்தையும் உங்கள் சார்பாகத் தானாகத் தேர்வு செய்து சிறப்பாகப் பயன்படுத்தும். எவ்வகை விளம்பரங்கள் வரலாம் வரக்கூடாது எனக் கட்டுப்படுத்த Allow & block Ads  பகுதியில் content பகுப்பிற்குக் கீழே ஒவ்வொரு தளத்தையும் காட்டும் வரிசைக்கு சென்று, அதில் வேண்டிய தளத்தைத் தேர்வு செய்து general categories பகுதியில் விரும்பிய வகை விளம்பரத்தை அனுமதிக்கவோ, தவிர்க்கவோ செய்யலாம். அதேபோல Ad review center பகுதி வழியே குறிப்பிட்ட ஒரு விளம்பரத்தைத் தடுக்கவோ அனுமதிக்கவோ முடியும்.

உங்களது சொந்தப் பக்கத்தில் உள்ள கூகிள் விளம்பரங்களைச் சொடுக்கக் கூடாது. அல்லது பிறரைச் சொடுக்கச் சொல்லியும் கேட்கக் கூடாது. அவை இயல்பாக நடக்கவேண்டும் என்பதே கூகிளின் நோக்கம். ஆபாசம், திருட்டுப் பதிவுகள் போன்றவற்றை இவர்கள் ஊக்குவிப்பதில்லை, புகார்கள் வந்தால் ஆட்சென்ஸ் கணக்கைத் தடை செய்துவிடுகிறார்கள். 1000 பார்வைக்கு சுமார் ஒரு டாலர் என்று வருவதால் நாளொன்றிற்கு சுமார் 100 பார்வையாவது கொண்ட தளமே ஓரளவிற்கு வருவாய் ஈட்ட முடியும். பொதுவாக விளம்பரதாரரைப் பொறுத்து பல வகை விளம்பரங்களையும் சன்மானத்தையும் தருகிறது. ஒவ்வொரு சொடிக்கிற்கும் ஒரு விலை என்றோ, ஆயிரம் பார்வை பட்ட விளம்பரங்களுக்கு ஒரு விலை என்றோ, ஆயிரம் ஊடாடப்பட்ட விளம்பரங்களுக்கு ஒரு விலை என்றோ பல வகை உள்ளன.

எதைப்பற்றி எழுதினால் எப்படி எழுதினால் வருவாயை அதிகரிக்கலாம் என்று விளம்பரங்களை நோக்கி எழுதாமல், எழுத்தை நோக்கி மற்றவை அமையும் வகையில் செயல்படுவதே நிலைத்த தரத்திற்கும், உண்மையான இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் இயன்றவரை பதிலிடப்படும்.

4 comments:

ஸ்ரீராம். said...

கடைசி பாராவில் சொல்லியிருப்பது ஏற்புடையது.

சேலம் தேவா said...

பதிவுக்கு நன்றி. இதேபோன்று youtube-ல் இணைப்பது பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இயல்பாக எழுதுவோம் நல்ல தரமுள்ள பதிவுகளுக்கு அடரவு வழங்குவோம்.
நன்றி நீச்சல்காரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கம் அருமை...

தொடர்வோம்... நன்றி...