Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Thursday, February 20, 2020

Info Post
"உங்களின் ஒரு பொழுதுபோக்கு ஒருநாள் பணிவாய்ப்பாகும்" என்று கிரேசி மோகன் சொன்னது போல பத்தாண்டுகளுக்கு முன் வலைப்பதிவு எழுத இணையத்திற்குள் வந்தவர்கள் இன்று அதன்மூலம் பல துறைகளில் கோலோச்சுகிறார்கள். இணையத்திற்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுபவர்கள் என்று ஒரு கணக்கை எடுத்தால் அதில் வலைப்பதிவர்கள் மறுக்க முடியாத அங்கமாக இருப்பார்கள். தமிழ் வலைப்பதிவின் வரலாறு பதினேழு ஆண்டுகளுக்கு மேல் போகும். தற்போதுள்ள சமூகத் தள வீச்சு பெரும்பாலும் இல்லாத காலத்தில் வேறு வழியின்றி எழுத வந்தாலும், வலைப்பதிவிற்கான தேவை இன்றும் உள்ளது. ஒரு செய்தியைத் தேடி எடுக்கவும், ஆவணப்படுத்தவும் இதர சமூகத்தள வடிவங்களால் முடியாது. கூகிள் தேடலிலும் வலைப்பதிவைத் தவிர பேஸ்புக்கோ, டிவிட்டரோ வருவதில்லை. ஆகவேதான் கல்லூரி மாணவர்களுக்கு நடக்கும் கணித்தமிழ் பயிற்சிப் பட்டறைகளில் வலைப்பதிவு அறிமுகம் என்ற தலைப்பு இருப்பதை வலியுறுத்தி வருகிறோம்.

வலைப்பதிவு எழுத வந்த காலக் கட்டத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் எழுதிய பதிவை எத்தனைப் பேர் படித்தார்கள் எவ்வாறு மற்றவருடன் பகிர்வது என்று தேடித் திரிந்திருப்போம். பல வலைப்பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்துத்தரும் ஒரு தளமே வலைப்பதிவுத் திரட்டி என்கிறோம். அப்போது பல திரட்டிகள் இருந்தன. ஒவ்வொரு காலத்தில் சில தளங்கள் செயலிழந்தாலும் சில தளங்கள் செயல்பட்டு வந்தன. மொத்தமாகக் கூட்டினால்  இருபதிற்கும் மேற்பட்ட திரட்டிகள் தமிழ் இணைய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். தமிழ்மணம், திரைமனம், தமிழ்ஷ், இன்ட்லி, தமிழ்10, தமிழ்வெளி, திரட்டி.காம், மாதமிழ், ஹாரம், யாழ்தேவி, தமிழ் களஞ்சியம், வலையகம், வலைப்பூக்கள், ஐ சங்கமம், இனிய தமிழ், மகளிர் கடல், பதிவர்.நெட், தமிழ்.பி.எம்., தேன்கூடு, இண்டிபிளாக்கர் என பட்டியலிடலாம். இதில் கடந்த வருடத்துடன் தமிழ்மணமும் செயல்படவில்லை. அப்படிப்பார்த்தால் பெரிதாக இல்லாவிட்டாலும் செயல்படும் தளமாக இந்தத் திரட்டிகளே  உள்ளன.
https://tamilthiratti.com/ தமிழ் திரட்டி
http://magalirkadal.blogspot.com/ மகளிர் கடல்  
https://www.indiblogger.in/ இண்டி பிளாக்கர்

இதுவரை 27 ஆயிரம் தமிழ் இணையத்தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இன்றைக்குத் தினமும் சுமார் இருநூறு வலைப்பதிவுகள் எழுதப்படுகிறன்றன. எண்ணற்றோர் சிறப்பாக வலைப்பதிவில் எழுதுகிறார்கள், பலர் படிப்பதற்கும் தயாராக உள்ளார்கள். ஆனால் இவற்றை இணைக்கும் வலைப்பதிவு திரட்டி ஒரு வெற்றிகரமான தளமாக ஏன் செயல்பட முடியவில்லை என்றால் தொழில்நுட்பப் போதாமை எனக் கணிக்கலாம். பதிவு எழுதியவர்கள் எல்லாம் திரட்டிக்கு வந்து பதிவை இணைக்கவேண்டியிருந்தது. தமிழ் மணம் போல தானாகப் பதிவைத் திரட்டினாலும் வாசகர் அணுகும் நவீனக் கருவிகளுக்கு ஒத்திசைவு இல்லாமல் இருந்தது. இந்த இரண்டு சவால்களுக்குத் தீர்வுகளுடன்  நண்பர் ஆரூர் பாஸ்கருடன் சேர்ந்து புதிய திரட்டி அறிமுகம் செய்யப்படுகிறது.

  • ஒருமுறை தளத்தை இணைத்தால் போதும். அதன் பதிவுகளைத் தானாகத் திரட்டிக் கொள்ளும். சிலரது தளமும் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கலாம். அனைவரும் தங்கள் தளம் உள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம்.
  • அமேசான் டைனமோடிபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணிக்கை வரம்பில்லா வலைப்பதிவையும் தானாகத் திரட்டிக் கொள்ளும் திறனுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு கொண்டு பதிவைத் தானாக வகைபிரித்து வாசகர்களுக்குப் பிரித்துக் காட்டும். கணித்தமிழில் Text classification நுட்பத்தை இங்கே கையாளப்படுகிறது. தொடங்கத்தில் சில பிசிறுகள் இருந்தாலும் விரைவில் இதன் திறன் அதிகரிக்கும்.
  • அனைத்துக் கையடக்கக் கருவிகளுக்கும் உகந்ததாக இதன் பயனர் இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிதில் கைப்பேசியிலிருந்து திரட்டியை எளிதில் அணுகிப் பயன்படுத்த முடியும். 
  • இன்றைய பதிவு, இந்த வாரப்பதிவு, கடந்த வாரம், முன்னணி 25 பதிவுகள் என்று காலவாரியாகவும் படிக்கலாம். தேடல் பெட்டியில் குறிச்சொல் இட்டும் தேடிப் படிக்கலாம்.

இது போக பல சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன. பல அம்சங்களும் ஆய்வு நிலையில் உள்ளன.  இனி எழுதுவோரையும் வாசிப்போரையும் இணைக்கும் சரமாக இந்தத் தமிழ்ச்சரம் செயல்படும். தொடர்ந்து எழுதுங்கள் தமிழ்ச்சரத்திற்கு ஆதரவு தாருங்கள்.

பதிவர் டிப்ஸ்:

கணினித் திரையின் இடது பக்கத்திலுள்ள "இணைக்க" என்ற பொத்தானை அழுத்தி அதில் வரும் படிவத்தில் உங்கள் தள விவரங்களை அளிக்கலாம். ஏற்கனவே தளம் இருந்தாலும் கூடுதல் தகவல்களை ஏற்றுக்கொள்ளவும்.

குறிப்பு:
கடந்த ஆண்டு இதே சர்வதேசத் தாய்மொழி நாளில் வாணியின் மேம்பட்ட பாதிப்பு வெளியானது. இந்தாண்டு தமிழ்ச்சரம் அறிமுகம் செய்யப்படுகிறது. வழக்கம் போல நிறைகுறைகளை அறியத் தரலாம்.


23 comments:

டிபிஆர்.ஜோசப் said...

தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பதற்கு நண்பர்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளது... தொடர்பு கொள்கிறேன்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வருகின்ற உங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். என்னுடைய தளங்களை இணைப்பேன். நன்றி.

வே.நடனசபாபதி said...

தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்! நானும் என்னுடைய வலைப்பக்கத்தை இணைக்க இருக்கிறேன்!

G.M Balasubramaniam said...

என் பதிவு ஒன்று இணைக்கப்பட்டுள்ள்துமீண்டும் இணைப்பு தகவல்கள்கொடுத்திருக்கிறேன் பல தலைப்புகளில் எழுது ஒவ்வொரு முறையும் இணைக்க வேண்டுமா

கிரி said...

வாழ்த்துகள் :-) இணைக்க முடியவில்லை.. பின்னர் முயற்சிக்கிறேன்.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  எங்களையும் இணைக்க முயற்சித்தேன். 

KILLERGEE Devakottai said...

அலைபேசி வழியாக பலமுறை முயன்றும் எமது தளம் இணைய மறுக்கிறது நண்பரே...
-கில்லர்ஜி

தருமி said...

பல ஆண்டு ஆசை. நிறைவேறுகிறது. மிக்க மகிழ்ச்சி. நன்றியும், என் பாராட்டுகளும்.

என்னை இணைக்க முயற்சித்து விட்டு பதிலுக்கு இன்னும் காத்திருக்கிறேன்.
எதிர்பார்ப்புகளுடன் .............

Avargal Unmaigal said...

ஆருர் பாஸ்கர் பேஸ்புக் பதிவின் மூலம் நான் அறிந்து அதனை எனது தளத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளேன்... உங்கல் இருவரின் முயற்சிக்கும் பாராட்ட்டுகள்..நான் முதலில் ஃபயர் பாக்ஸ் புரோவுசர் மூலம் பல முறை முயற்சித்தே இணைக்க முடியவில்லை அதன் பின் குரோம் மூலம்தான் இணைத்தேன்...

'பசி'பரமசிவம் said...

நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

என் தளத்தை இணைக்க முயல்வேன்.

தேவை நேரின் எழுதுவேன். நன்றி நீச்சல்காரன்.

Unknown said...

வணக்கம்!
இது எனது முதல் கருத்துரை. எனது கணினியில் ஃபயர் ஃபாக்ஸ் மற்றும் ஆபெரா ப்ரௌசர்கள் உள்ளன. எனது வலைத் தளங்களை இணைக்க உள்ளேன்.
உங்களது தமிழ்ப் பணிகளுக்கு மனமார்ந்த நன்றி! நல்வாழ்த்துக்கள்!
சந்திர மௌலீஸ்வரன்-ம.கி.

கரந்தை ஜெயக்குமார் said...

சப்மிட் செய்ய இயலவில்லை ஐயா

shanmugampoem2017.blogspot.com said...

I wish you success in your endeavours.
Can I get a friend who can translate 100 sellects poems of 10100 enEnglipoems penned by me?
RM Shanmugam Chettiar pH 9080455850

வலை ஓலை said...

புதிய திரட்டியை வரவேற்கிறோம். தமிழ்மணம் செயற்படாத சந்தர்ப்பத்தில் பழைய நிலை போல வாசகர்களை ஊக்குவிக்க திரட்டிகள் பல உருவாக வேண்டும். அதற்காகவே உருவாகியிருக்கிறது நமது வலை ஓலை திரட்டி.

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

Kasthuri Rengan said...

நல்ல முயற்சி ராஜ் தொடர்வோம்

கதை சொல்லி காப்பியா said...

வணக்கம், தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

ஆனந்த் சாம்புவராயர் said...

நல்ல தகவல்

கதை சொல்லி காப்பியா said...

வணக்கம்,என் பதிவுகள் இன்று இருக்கிறது நாளை மறைந்து விடுகிறது

கதை சொல்லி காப்பியா said...

tamizhdesan.blogspot.com

Neechalkaran said...

@கதை சொல்லி காப்பியா
தளம் உள்ளதாகவே தெரிகிறதே. மீண்டும் சிக்கலிருந்தால் தொடர்பு எண்ணுடன் neechalkaran@gmail.com தொடர்பு கொள்ளுங்கள். பேசுவோம்

Lagoon House said...

எனது வலையினையும் இனப்பேன்

கதை சொல்லி காப்பியா said...

வணக்கம், கொரானா காலத்துச் சண்டைகளும் பாலை நில அரசியலும் 01 என்கிற கட்டுரை என்னுடைய தவறுதலாக அழிந்து விட்டது. அக்கட்டுரையைத் தர முடியுமா? தோழரே நன்றி