சில ஆண்டுகளாக இயங்கிவந்த ஆக்ஸ்போர்ட் தமிழ் அகராதியின் இணையப் பதிப்பு நேற்றுடன் (மார்ச் 31) நிறுத்தப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்னர் அறிவித்து நேற்றுடன் தளத்தில் அதன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளனர். இது இணையத் தமிழ் வளர்ச்சிக்கு சிறு பின்னடைவு என்றாலும் அந்தத் தரவுகளை ஏபிஐ வழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இனி மூன்றாம் நபர் சேவையை மட்டும் தரவுள்ளதாக ஆக்ஸ்போர்ட் கழகத்தார் குறிப்பிடுகின்றனர்.
மற்ற அகராதிகளை ஒப்பிடுகையில் இது சர்வதேச அகராதியாக இருந்தது. சுமார் இருபதாயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் பிரிடிஷ் அமெரிக்க வழக்கு போல தமிழில் இலங்கை வழக்கு, தமிழக வழக்கு என்று பிரித்துக் காட்டும் திறன் கொண்டிருந்தது. மேலும் அருகிவரும் வழக்கு, பெருகிவரும் வழக்கு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, உயர் வழக்கு, தகுதியற்ற வழக்கு, கிறித்தவ வழக்கு என்று சொல்லை ஆழமாகப் புரிந்து வகைப்படுத்தியிருந்தது இதன் தனிச் சிறப்பெனலாம். இதற்கு முன்னர் லிப்கோ தமிழ் அகராதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் அகராதி டாட் காம் போன்றவை இது போல இணையத்திலிருந்து நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, சிங்கப்பூர் நாடுகளை அடுத்து அரசு சார்பாக இணையத்தில் வெளியிடப்பட்ட தற்கால அகராதி என்பது https://sorkuvai.com ஆகும்.சொற்குவைத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இதனைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் நிர்வகித்துவருகிறது. இதில் 3.43 லட்ச தனிச் சொற்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 14469 என்ற கட்டணமில்லாத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் பதில்கள் பெறலாம்.
தவறான சொல்லை உள்ளீடு செய்தால் பிழைச் செய்தியோ இணையான சொல் பரிந்துரையோ இல்லை.
சொற்பிறப்பியல் பகுதி சிறிய திரையாக இருப்பதால் படிப்பதற்கு உகந்ததாக இல்லை. கைப்பேசியிலோ, கணினியிலோ திரையின் கணிசமான பகுதியை லட்சினையே அடைத்துக் கொள்கிறது. வாசிக்கும் பகுதியின் அளவை அதிகரிக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் நேரடியாக ஒரு உரலி வழங்கியிருக்கலாம். இதன் மூலம் இணையத்தில் பகிர்ந்துகொள்ளவும், கூகிள் போன்ற தேடுதளத்தில் காணக்கிடைக்கவும் வாய்ப்பமைந்திருக்கும். தற்போது இதனை எளிதில் சமூகத்தளத்தில் பகிர்வதற்குக்கூட வாய்ப்பில்லாமல் உள்ளன. ஆனால் இணையத்தில் உள்ள மாபெரும் சொல்வங்கி என்று இதனைச் சொல்லலாம்.
சொற்பிறப்பியல் பகுதி சிறிய திரையாக இருப்பதால் படிப்பதற்கு உகந்ததாக இல்லை. கைப்பேசியிலோ, கணினியிலோ திரையின் கணிசமான பகுதியை லட்சினையே அடைத்துக் கொள்கிறது. வாசிக்கும் பகுதியின் அளவை அதிகரிக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் நேரடியாக ஒரு உரலி வழங்கியிருக்கலாம். இதன் மூலம் இணையத்தில் பகிர்ந்துகொள்ளவும், கூகிள் போன்ற தேடுதளத்தில் காணக்கிடைக்கவும் வாய்ப்பமைந்திருக்கும். தற்போது இதனை எளிதில் சமூகத்தளத்தில் பகிர்வதற்குக்கூட வாய்ப்பில்லாமல் உள்ளன. ஆனால் இணையத்தில் உள்ள மாபெரும் சொல்வங்கி என்று இதனைச் சொல்லலாம்.
இவை தவிர இணையத்திலுள்ள சில மாற்று அகராதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
https://tamilpulavar.org
https://www.languagecouncils.sg/tamil/en/
https://www.trilingualdictionary.lk/
http://crea.in/
http://www.viruba.com/Nigandu/Nigandu_Word.aspx
http://www.xn--vkc6a6bybjo5gn.com/
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/
http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/
http://dsal.uchicago.edu/dictionaries/winslow/
http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
http://www.tamilvu.org/library/ldttam/html/ldttamin.htm
http://www.tamilvu.org/library/lexicon/html/lexhome.htm
http://www.tamildict.com/tamilsearch.php
http://www.cfilt.iitb.ac.in/indowordnet/
http://ta.wiktionary.org/wiki/
http://vaani.neechalkaran.com/word
மேலும் மின்னுருவாக்கம் ஆகாத பழைய அச்சு அகராதிகளை இணையத்தில் கொண்டு வரவும் பல தன்னார்வலர்கள் சேர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுடன் நீங்களும் சேர்ந்து சிறு பங்களிப்பை அளிக்க நிகண்டியம் திட்டத்தில் இணையலாம். எத்தனை அகராதிகள் வந்தாலும் மக்கள் புழக்கத்தில் தமிழ்க் கலைச்சொற்கள் கலந்தாலொழிய இதன் பயன் முழுமையடையாது.
2 comments:
முடிவில் நல்லதொரு உண்மை...
இணைப்புகளுக்கு நன்றி...
பயனுள்ள தகவல்
பாவிக்கிறேன்
பாராட்டுகள்
Post a Comment