Mobile version | RSS Feed |
புதியவை
Loading...



Monday, May 25, 2020

Info Post
தற்போதைய சூழலில் பல இணையவழிப் பயிலரங்கங்கள் நடக்கின்றன. பங்கேற்பாளர்களுக்கு மென்சான்றிதழும் வழங்கும் முறை உள்ளது. சில செயலிகளில் இத்தகைய சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கினாலும் பெரும்பாலும் எளிதாக இல்லை. இணையத்தில் உள்ள சில வரைகலைச் செயலியில் தமிழ் எழுத்துக்கள் சிதைந்து வருவதால் அங்கும் தயாரிப்பது கடினம். அதனால் வரைகலை அறிந்தவரே அனைவர் பெயரையிட்டு மென் சான்றிதழ் தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதை எளிமையாக்க இச்செயலி அறிமுகமாகிறது.


பெயர்ப் பட்டியலையும்(Participants List), சான்றிதழுக்கான வார்ப்புருவையும்(Template) கொடுத்தால் அத்தனைச் சான்றிதழைத் தயாரித்துவிடும். இதில் பெயரளவில் சில வார்ப்புரு (டெம்ளேட்) இருக்கும் அதைக் கூடத் தேர்வு செய்து பட்டியலை மட்டும் கொடுத்தும் சான்றிதழ் தயாரிக்கலாம், அல்லது சொந்தமாக ஒரு மூல வார்ப்புருவைப் பங்கேற்பாளர் பெயரில்லாமல் அவரவர் நிறுவன லச்சினை, கையெழுத்துடன் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை இக்கருவியில் பதிவேற்றம் செய்து, பெயர்ப் பட்டியலை அப்பெட்டியில் இட வேண்டும். "Generate" பொத்தான் மூலம் மொத்தமாக உருவாக்கிப் பார்க்கலாம். பொதுவாக, பெயர் சரியாக இடத்தில் அமராது, அதனால் அம்புக்குறி மூலம் முன் பின் நகர்த்திச் சரியான இடத்தில் அமைத்துக் கொள்ளவேண்டும்.

மீண்டும் "Generate" கொடுத்தால் அனைத்துப் பங்கேற்பாளர் பெயருடன் சான்றிதழ் உருவாகிவிடும். "Download" பொத்தானை அழுத்தி மொத்தமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். மொத்தம் மூன்று அங்கங்கள் உள்ளன, முதல் பெட்டியில் அட்டவணை வடிவில் இரு அங்கங்கள்(Name1, Name2) இருக்கும். இவை ஒவ்வொரு சான்றிதழுக்கும் மாறக்கூடிய தகவல்களைக் கொடுக்கலாம். உதாரணமாக, பெயர், சான்றிதழ் எண், பங்கேற்பாளரின் தரநிலை போன்றவற்றை ஒரு எக்சல் அல்லது விரிதாளில் இணைக்கு இணையாக இட்டு அவற்றை இங்கே நகலெடுத்து ஒட்ட வேண்டும். நிகழ்ச்சியின் பெயர், பாராட்டு வரிகள், நாள் போன்ற அனைத்துச் சான்றிதழுக்கும் பொதுவான ஒரு உள்ளடக்கத்தை மூன்றாவது பெட்டியில் கொடுக்கலாம். அதற்கேற்ப அதன் அமைவிடத்தை நகர்த்தி நிறுத்திக் கொள்ளவேண்டும். பின்னர் ஜெனரேட் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம்.

சான்றிதழ்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு வார்ப்புருவினை அடிப்படையாகக் கொண்டு சொற்களை மட்டும் மாற்ற வேண்டிய தேவையனைத்திற்கும் இச்செயலி உதவும். ஒரே வடிவில் பல நூல்களின் அட்டைப்படம் தயாரிக்கலாம், ஒரே வார்ப்புரு கொண்டு கவிதைகளை சிறுசிறு படங்களாகத் தயாரிக்கலாம், இப்படிப் பல விதங்களில் பயன்படலாம். இதுவொரு தொடக்க நிலைதான் மேலும் தேவைக்கேற்ப மேம்படுத்தப்படும், பரிந்துரைகளையும் வழங்கலாம். அனைத்து மொழிகளிலும் இது செயல்படும். பயனுடையதென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எளிமையாகச் சான்றிதழுக்கான வார்ப்புரு தயாரிக்க இந்தக் காணொளியைப் பார்க்கலாம்.
இந்தச் செயலியின் செயல்முறை விளக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

இதன் மேம்பட்ட அடுத்த பதிப்பு



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

சங்கரா கல்லூரி தமிழ்த்துறை said...

புதிய வசதியை அறிமுகம் செய்ததற்கு நன்றி.