Tamil unicode converter |
இனி எந்தவொரு ஆர்.டி.எப்.(Rich Text Format) வடிவக் கோப்பையும் வெட்டி ஒட்டி மாற்றிக் கொள்ளலாம். பழைய முறையிலும் வெறும் பனுவலை மட்டும் இட்டும் மாற்றிக் கொள்ளலாம். எம்.எஸ்.வேர்ட் போன்ற சொல்லாளர்களில் இருந்தோ வேறு இணையப் பக்கத்திலிருந்தோ நேரடியாகவும் உள்ளடக்கத்தை இட்டால் அதிலுள்ள எழுத்துருக்களைக் காட்டும் அதில் விரும்பியவற்றை மட்டும் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். மேலும் மாற்றப்பட்ட ஆக்கங்களை மீண்டும் ஒழுங்கு மாறாமல் பயன்படுத்த முடியும். உள்ளீட்டுக் குறியாக்கம் தெரியாவிட்டால் "auto detect" தேர்வு செய்து முயலலாம். வெளியீட்டுக் குறியாக்கத்தை "default" என்று கொடுத்தால் யுனிக்கோட் முறைக்கே மாற்றும். மற்றபடி பழைய அம்சங்கள் அப்படியே உள்ளன.
சிறிய செயல்முறை விளக்கம்
இதில் மொத்தமாக 43 வகையான குறியாக்கங்கள் உள்ளன. புதிய குறியாக்கங்கள் ஏதேனும் இதில் விடுபட்டிருந்தால் அறியத் தரலாம். நிறை குறைகளையும் பகிர்ந்து மேம்படுத்த உதவலாம்.
பொதுத் தகவல்
இலவச தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் பல இருந்தாலும் பழைய வடிவமைப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் யுனிக்கோட் அல்லாத குறியாக்கத்தில் உருவான எழுத்துருவையே பயன்படுத்துகின்றனர். இணையத்தில் ஒருங்குறியே பிரதானமானாலும் அவை அல்லாத தளங்களும் பக்கங்களும் பல உள்ளன. நீங்கள் பாமினியிலோ மயிலையிலோ இட்டுத் தேடினால் அத்தகைய தளங்கள் கூகிளில் கிடைக்கும். பொதுவாக இத்தனைக் குறியாக்கங்களைப் பார்க்காதவர்களுக்கும், பழைய கணித்தமிழ் பாதையை அறிய விரும்புபவர்களுக்கும் இணையத்தில் உள்ள ஒருங்குறி அல்லாத வெவ்வேறு வகை பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படித்தும் பார்க்கலாம்.
4 comments:
சிறப்பு... வாழ்த்துகள்...
thanks 🙏
அரியதொரு தமிழ்ப்பணி. நல்வாழ்த்துகள்..
தொடரும் உங்கள் தமிழுக்கான சேவைகள் வியப்பூட்டுகின்றன. பாராட்டுதல்களுக்குரியன. முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறுவர். வாழ்த்துகள்.
கூகுளின் நோட்டோ சான்ஸ் போன்ற otf வகை எழுத்துருக்களையும் இதில் இணைக்க வேண்டுகிறேன். இன்று முயற்சித்ததில் சரியாக வரவில்லை.
Post a Comment